சமையல்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
என்ற திருக்குறள் சொல்வது என்னவென்றால்

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்றும் வேண்டியது இல்லை.

உணவே மருந்தாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அது பாட்டி வைத்தியம் மூலமாக நம்மை வந்தடைந்துள்ளது.

இருமல் சளிக்கு இஞ்சி, சித்திரத்தை, சீரகம், மிளகு கசாயம், வெற்றிலை கசாயம், துளசி கசாயம, மஞ்சள், தூதுவளை இலை, கற்பூரவள்ளி இலை

அஜீரண கோளாறு நீங்க சோம்பு, பெருங்காயம்

மூடு வலிக்கு முடக்கத்தான் கீரை

சரும பராமரிப்பு க்கு மஞ்சள், பயற்றம்மா, குப்பைமேனி இலை, கரிசலாங்கண்ணி இலை

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம், பாகற்காய், கோவைக்காய்

சிறுநீரக கற்கள் போக்க வாழைத்தண்டு, பீன்ஸ்

இரும்பு சத்து பெற முருங்கைக்கீரை, உலர் திராட்சை, பேரிச்சை

கர்ப்பப்பை நலனுக்கு வெள்ளை பூசணி, வெந்தயம்

எலும்பு வலுப்பெற உளுந்துக்களி, முருங்கைக்கீரை , பசலை…

Prev 1 of 20834 Next
Prev 1 of 20834 Next