ரவை இட்லி (Idly)
உலகளவில் மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக விளங்குவது இட்லியின்(Idly) சிறப்பு. வாரத்தில் பெரும்பான்மையான நாட்களில் காலை உணவாக இட்லி இடம்பிடித்து விடுகிறது. கைக்குழந்தை தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தி போகும் மென்மையான உணவு.
பூண்டு ,பொடி, காய்கறி ,கீரை ,குஷ்பூ இட்லி என பல வகைகளை கொண்டு வந்த பெருமை நம் வீட்டு தாய்மார்களுக்கே உரித்தானது.
துரித மாவுகள், வாரக்கணக்கில் கெடாத மாவுகள் என்று இட்லியின் தரம் இன்று குறைவது போல இருந்தாலும் பல வீடுகளில் இன்னமும் மல்லிகைப்பூ இட்லிக்கள் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன.
2. ஊறியதும் அதில் தேவையான அளவு நீர் விட்டு நல்ல மையாக அரைக்கவும். (உழுந்து ஊறிய நீரை விட்டு அரைக்கலாம்)
3.அரைத்த உழுந்துக் கலவையை ஒரு பாத்திரத்தில் விட்டு மூடி வைக்கவும்.
4. ரவையை 10 நிமிடங்கள் அவித்துக் கொள்ளவும்.( வேறு பாதத்திரம் எடுக்காமல் இட்லி பாத்திரத்திலேயே அவிக்கலாம்)
5.இஞ்சியை கழுவி தோல் சீவி மிக சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
6. சட்டி ஒன்றில் எண்ணெய் விட்டு கடுகு,பெரியசீரகம் செர்த்து வெங்காயம்,கருவேப்பிலை,செத்தல் போட்டு தாளிக்கவும்.( தாளித்த சம்பல் செய்வதாக இருந்தால் சம்பலுக்கும் சேர்த்து தாளிக்கலாம் )
7.அவிக்க ஆரம்பிக்கும் முதல் அவித்த ரவை , உப்பு, அப்பச்சோடா சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்றாகக் கலக்கி ஓரளவு கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
8. மாவில் இஞ்சித்துகள்கள்,தாளித்தவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
9.மா ரெடி. இட்லி அவிக்கும் சட்டியில் நீர் விட்டு கொதித்ததும் தட்டுகளில் மாவை வார்த்து மூடி அவிக்கவும்.
இட்லிக்கு அரைத்த சிவப்பு தாளித்த சம்பல் அருமையாக இருக்கும்.
குறிப்பு
இஞ்சி, தாளிதம் விருப்பமில்லாவிட்டால் தவிர்த்துக் கொள்ளலாம்.
இட்லிக்கு மா ,தோசை மாதிரி அதிகம் புளிக்க தேவை இல்லை.
இங்கு குளிர் அதிகம் என்பதால், நான் இரவு அரைத்தமாவை அடுத்தநாள் மதியம் பாவிக்கின்றேன்.
வெப்ப நாடுகளில் காலையில் அரைத்துவைத்து இரவு உணவிற்கு பாவிக்கலாம்.
இட்லி (Idly) பஞ்சு போல வருவதற்கு என்ன செய்யலாம்?
குறிப்பு 1