இயற்கை அழகு

அழகாய் பொலிவான தோற்றத்துடன்  இருக்க யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் இயற்கையின் பொருட்களைப் பயன்படுத்தினால் ஆரோக்கித்துடனான  அழகு கிடைக்கும். அந்த அழகும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு, இயற்கை முறையில் கிடைக்க வேண்டும் என்பதே பலரது விருப்பம்.

கடைகளில் கிடைக்கும் எந்தவொரு அழகு சாதன பொருளும், ஏதேனும் ஒரு பழம் அல்லது காய்கறியில் இருந்து எடுக்கப்பட்ட சாறு கொண்டு தயாரிக்கப்பட்டதே! ஆகையால், நாம் இந்த செயற்கை அழகு சாதன பொருட்களை தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளையே நேரடியாக பயன்படுத்தி ஆரோக்கியமான அழகைப் பெறுவோம்.

இது போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தை கையாளும் பொழுது பக்க விளைவுகள் இல்லை.மற்றும் பணத்தை விரையமும் இல்லை.