நோய்களைத் தீர்க்கும் வேப்பிலை (Neem leaves benefits)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் வேம்பின் அனைத்துபாகங்களும் ஆகும்.அதிலும் வேப்பிலை…. (Neem leaves benefits) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை அதி சிறந்த அருமருந்து.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள்  வேப்பிலையை பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய  அற்புத சக்தி வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் போன்ற  சரும நோய்கள் வேப்பிலையால் குணமாகக் கூடியவை.

Neem leaves,benefits,neem leaves powder,neeem leaves diabetes,neem leaves capsules,வேப்பிலையின் பயன்கள்,சர்க்கரைநோய்க்கு வேப்பிலை

வேப்பிலையின் பொதுவான பயன்பாடு (Neem leaves benefits)

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

காலையில் டீயுடன்  வேப்பிலையை சேர்த்து அருந்தினால் சாதாரண சளி, இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

Click & buy

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவகுணங்கள் (Neem leaves benefits)

 உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர்.

Neem leaves,benefits,neem leaves powder,neeem leaves diabetes,neem leaves capsules,வேப்பிலையின் பயன்கள்,சர்க்கரைநோய்க்கு வேப்பிலை

நோய்களுக்கு அருமருந்தாகும் வேப்பிலை (Neem leaves benefits)

ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்களும், சரும பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுவது வழக்கம்.  எல்லாவற்றிற்கும் நாம் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.

பழங்காலத்திலும் நம் முன்னோர்கள் கள் இயற்கையில் கிடைத்த மூலிகைகளை கொண்டு அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு கண்டனர்.  அவற்றில் முதன்மையானதாக இன்றளவும் கூறப்படுவது வேப்பிலை மற்றும் மஞ்சள்.

அதாவது, வேப்பிலை சாறு, விழுது, கஷாயம், பொடி என நோயின் தன்மைக்கு ஏற்ப பயன் படுத்தலாம். எவ்வகை மருந்தையும் விரைவாக தயாரிக்கலாம், அதே போன்று மிக விரைவாக செயல் படும் தன்மை கொண்டது. 

உடலில் தோன்றும் கட்டி, அரிப்பு, அக்கி, சொரி,சிரங்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வெளி பூச்சாகவும், அலர்ஜி, விஷக்கடி, நீரழிவு நோய், வயிற்று பூச்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்தும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. 

வேப்பிலையில் வீட்டு மருத்துவம் (Neem leaves home medicine)

வேப்ப முத்து, சிறிய வெங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்து புழுவெட்டு ஏற்பட்ட இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து  குளித்தால், தலைமுடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பித்த வெடிப்புகள், நகசுத்தி போன்ற பிரச்சனைகளுக்கு பற்று போட்டால் பலன் கிடைக்கும்.

வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அறிய பின் அந்த நீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் தீர்வாகும். 

மாதம் ஒரு முறை வேப்பிலையை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும். சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு வேப்பிலை அரைத்து கொடுத்தால் வயிற்றை சுத்தம் செய்து பசியை தூண்டும்.

வேப்பம் இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.

Neem leaves,benefits,neem leaves powder,neeem leaves diabetes,neem leaves capsules,வேப்பிலையின் பயன்கள்,சர்க்கரைநோய்க்கு வேப்பிலை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அதிகரிக்க மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் செய்து சாப்பிட வேண்டும்.

சருமப் பராமரிப்பு (Skin Care)

அனைத்து சரும பராமரிப்பிலும் வேம்பு முக்கிய பங்கு வைக்கிறது.  வேம்பு மற்றும் மஞ்சள் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழிவினால் முகம் பொலிவு பெறும்.

முகத்தில் தோன்றும் பருக்கள் போன்றவற்றிற்கு எதிராக நன்கு செயல் படும்.முகப்பரு உள்ள இடத்தில் வேப்பிலையை அரைத்து  பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

சரும வியாதிகள் போக  வேப்பிலையை அப்படியே அரைத்து  மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

Leave a Reply

Your email address will not be published.