முகப்பு

தனது  அன்னையின் மடியில்  இருக்கும் போது  ஒரு  குழந்தை எவ்வளவு மகிழ்வாகவும் பாதுகாப்பாகவும் உணருமோ,அது போலவே நமது தாய் மருத்துவமான சித்த மருத்துவம் யோகாசனம் என்பனவற்றை உபயோகிப்பதன் மூலம் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ முடியும்.

மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிக மிக இன்றியமையாதது உடல் நலம் ஆகும். அவசரமயமான  இக்காலக் கட்டத்தில் நமக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு ஏற்படுவதற்கு முன்னர் நம் உடல் நலத்தில் நாம் அக்கறைக் கொள்வது இல்லை.

நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்ணும் உணவில் எடுத்துக் கொண்ட அக்கறை தான் அதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், இயற்கையான பழங்கள் போன்றவற்றை தான் உணவாக உண்டு வந்தனர். இவ்வாறு உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் உடலுக்கு வழங்குகிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதில்லை. மனிதனுக்கு இயற்கை அளிக்கும் ஒப்பற்ற செல்வங்கள் தான் காய்கற்களும், பழங்களும்.

ஆதிகால மனிதர்கள் நெருப்பினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக உண்டு வந்தனர். இதன் மூலம் பச்சைக் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்குள் செல்கிறது. இதுவே சமைத்து உண்ணும் போது காய்கறிகளில், பழங்களில் உள்ள சத்துகளில் பாதி ஆவியாகி செல்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களுடைய இயற்கையான உணவினைத் தான் இந்நாள் வரை உண்டு வருகின்றன. ஆனால் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதர்கள் மட்டும் நவநாகரிகமான யுகத்தில் அறிவியல் வளர்ச்சியில் உயர்ந்து, உடலியலில் பல்வேறு நோய்களினால் பதிக்கப்பட்டு வருகின்றான்.

இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய உணவில் பச்சைக் காய்கற்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் உண்ண வேண்டும். “வருமுன் காப்பதே” சிறந்தது.