1 வயது குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள்( Foods not for 1year child)

குழந்தைகளுக்கு 1 வயது (1 year child) ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

எனவே குழந்தைக்கு எந்த உணவு ஆரோக்கியம் அளிக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். அதன்பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு எந்த உணவு,எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில்மிகுந்த கவனம் தேவை.

குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்க சரியான உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை எவை?

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தர கூடாத உணவுகள் (Foods that are not suitable for children up to 1 year of age)

குழந்தைக்கு ஒரு வயது (1 year child) தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது.பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது.

இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.1 வயது வரை குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள்,Foods not suitable for 1 year child,annaimadi.com,Suitable food for 1 year child,foods for baby,குழந்தைகளுக்கு ஏற்ற உணவு,௧ வயது குழந்தைக்கு ஆகாத உணவு
குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது.

பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலிலும்  சோடியம் இருக்கும்.

நீங்கள் கூடுதலாக உப்பை திட உணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம்.மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும்.

அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது.

 
1 வயது வரை குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள்,Foods not suitable for 1 year child,annaimadi.com,Suitable food for 1 year child,foods for baby,குழந்தைகளுக்கு ஏற்ற உணவு,௧ வயது குழந்தைக்கு ஆகாத உணவு
ஒரு வயது குழந்தை உணவு முறையில் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.
திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.
ஒரு வயது குழந்தை (1 year child)உணவு முறையில் கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில்நைட்ரேட்(Nitrate)அளவு அதிகமாக உள்ளது.
இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும்.
இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பதும் இல்லை. எனவே இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு ௧ வயது நிரம்ப  முன் கொடுக்க வேண்டாம்.

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை ஒரு வயது குழந்தைக்கு மொத்தமாக கொடுக்க கூடாது. ஏனென்றால் இவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
மேலும் குழந்தைக்கு இவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை.

எல்லா குழந்தைகளுக்கும் மிகமிக பிடித்த ஒன்று சாக்லேட். இவை குழந்தை அதிகம் சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
பாப்கார்ன் (Popcorn) ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான தீனியாகும் இருப்பினும் இது ஒரு வயது குழந்தைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை கண்டிப்பாக குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்கக்கூடாது.
முட்டையின் வெள்ளைக்கருவானது ஒரு வயது (1 year child)  குழந்தைக்கு அலர்ஜியை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள்(Foods cause allergies in the 1 year child)

தாய்க்கு அல்லது  குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இறால், நண்டு போன்ற உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது.

ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.

காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். முடிந்தவரை குழந்தைக்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

வேர்க்கடலையில் இருந்து பெறப்படும்  பட்டரும்(Peanut butter) கூட ஒரு வயது குழந்தைகளுக்கு (1 year child) அலர்ஜியை உண்டாக்க கூடியது.
எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *