சித்தமருத்துவம்

சித்த மருத்துவம்? இது ஒன்றும் இல்லைங்க.நமக்கெல்லாம் தெரிஞ்சது தான்.நம்ம பாட்டிமார் செய்த கைவைத்தியம்.சுருக்கமாக சொல்வதானால் இது மருந்தில்லா மருத்துவம்.உணவு தான் இங்கு மருந்து.நோயின்றி வாழ பாட்டி அப்ப சொன்னதை இப்பவாவது செய்து தான் பார்ப்போமே.காசா பணமா!என்னங்க நான் சொல்றது சரி தானே? சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை.

நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் எனப்படும் இந்நோயை சித்த  மருத்துவத்தில்‘மதுமேகம்’ என அழைக்கிறோம். இந்நோய் பற்றி சுருக்கமாக  கூறிவிட முடியாது. பேசுவதற்கு அத்தனை விசயங்கள் உள்ளன.
நீங்கள் நோயின் ஆரம்ப நிலையில்  இருந்தாலும் சரி அல்லது ‘இன்சுலின்’ ஊசி போட்டுக் கொண்டிருந்தாலும் சரி,அதோடு கண்டிப்பாக சித்த மருத்துவமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோயினால் வரக்கூடிய மற்ற  பாதிப்புகளான கண் பாதிப்பு,நரம்பு பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு,இரத்த  குழாய் பாதிப்பு,இதய பாதிப்பு போன்றவைகளை நிச்சயம் வராமல் தடுக்கமுடியும்.நீரிழிவுக்கு மருத்துவம் என்பது வெறுமனே இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல.