அற்புத மருத்துவ பலன்களைத் தரும் ஆவாரம் பூ (Aavarampoo)
தலை முடி வளருவதில் இருந்து நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ (Aavarampoo) உதவுகிறது.ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது.
ஆவாரம்பூவின் அற்புத மருத்துவ பலன்கள்(Amazing Medicinal Benefits of Aavarampoo)
ஒரு பிடி ஆவாரம்பூவை (Aavarampoo) தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.
தலைக்கு குளிக்கும் போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.

நீரிழிவு நோய்க்கு ஒரு வரப்பிரசாதம்
நீரிழிவுநோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரககோளாறு என எல்லாவற்றுக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து.
சமூலம்’னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 – 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.
தோல் நமைச்சல்
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேத்து அரைத்து உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால் தோல் நமைச்சல் தீரும்.
சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம்
ஆவாரம் பூவுடன் கருப்பட்டி சேர்த்து மணப்பாகு செய்து குடித்தால் ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும்.
ஆவாரம்பூ பொடி
ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம்புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து, இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தினமும் காலை, மாலை, அரைத் தேக்கரண்டி அளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
‘ஆவிரை’ னு அந்தக் காலத்தில சொன்னத இந்த காலத்தில் ஆவாரம்பூன்னு சொல்றாங்க. தைப்பொங்கல் அன்று காப்புக்கட்டுவதுக்கும், மாட்டுப்பொங்கல் அன்று மாடுங்களுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இப்போது பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆவாரைத் தாவரத்தில் Sennapicrin என்னும் Cardiac glucoside உள்ளது. ஆவாரை உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
“ஆவாரை பூவிருக்கு தேகத்த குளிராக்க
தாழ்வார தொட்டிலிலே தங்கமே கண்ணுறங்கு
அடிவானம் தூங்கிருச்சு அன்னமே கண்ணுறங்கு!
ஆராரோ ஆரிரரோ!”
கிராமத்து தாலாட்டு பாட்டினை இப்போதெல்லாம் எங்கு பார்க்க முடிகிறது?! குழந்தைகளுக்கு செல்ஃபோனை கையில் கொடுத்து தூங்க வைக்கும் காலமாக மாறிவிட்டது.