ஆரோக்கியம் காக்கும் அகத்திக்கீரை பொரியல் (Akaththik keerai recipe)

அகத்தி கீரை (Akaththik keerai) குளிர்ச்சி தரும் குணமடையது. உடலில் உள்ள அனைத்துவிதமான விஷங்களையும் முறியடிக்ககூடியது.

மருந்துகளை உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை (Akaththik keerai) உண்டால் மருந்தின் குணத்தை முறியடித்துவிடும் எனவே மருந்து உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை (Akaththik keerai) எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது அகம் + தீ அதாவது நம் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்ககூடியது. அகத்தி கீரையை தினம்தோறும் உண்ணாமல் அடிக்கடி உண்பது நல்லது.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையை குறைவாக சாப்பிடவேண்டும். உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையது.

ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை (Akaththik keerai) பொரியல் செய்வது எப்படி எனபார்ப்போம்.

அகத்திக் கீரையின்மருத்துவ பண்புகள் (Medicinal properties of Akaththik keerai)

நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.
சம அளவு தேங்காய் அகத்திக் கீரையுடன் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
அகத்திக் கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால்,கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்துருக்கள் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.
இந்தக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இள நரை ஏற்படுவதையும் தடுக்கும்.
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்தநீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

விரதம்  இருப்பதால் சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.அதனைத் தடுக்க அகத்திக்கீரை தான் அருமருந்து.

இதனாலேயே ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விரதம் முடித்து மறுநாள் துவாதசியன்று அகத்திக் கீரை சாப்பிடுவது வழக்கம்.

அதோடு அகத்திக்கீரையில் இரும்புச்சத்து, கல்சியம் அதிகம் உள்ளது. எனவே தான் விரதம் இருந்த மறுநாள் இந்த கீரையை சாப்பிடும்படி பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது சக்தி கொடுக்கும்.

வயதானவர்களுக்கு

இதில் விற்றமின்- சி உள்ளதால் , நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது.  முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்திக் கொள்ள முடியும்.

பெண்களுக்கு

அகத்தி கீரையில், இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.

சிறுவர்களுக்கு

உடல் வள்ர்ச்சிக்கு தேவையான புரதம் (Protein) இதனுள் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும .

மேலும் இதில் சுண்ணாம்பு (Calcium ) சத்தும் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகளுக்கு பலம் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் முதுமையில் வரமால் தடுக்கலாம்.

செரிமானத்தை சீராக்கும் அகத்தி

இதில் நார்சத்து உள்ள காரணத்தினால் செரிமானத்தை சீராக்கும் ஆற்றலை பெற்றது. உடலில் செரிமானம் சரியாக இருப்பின் கழிவுகள் முறையாக வெளியற்றப்டுவதுடன் பசியையும் முறையாக தூண்டும்.

கண்களை குளிர்ச்சியாக்கும் அகத்தி

இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும்.

இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.

நம்  முன்னோர்கள் ஆன்மீகத்தில் உடல் நலத்தை, அறிவியலை, மருத்துவத்தை புகுத்தியுள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

Leave a Reply

Your email address will not be published.