பாதாம் எண்ணெயும் சரும அழகும் (Almond oil & skin beauty)
பாதாம் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து ,சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, சருமத்தை அழகாக்கிறது (Almond oil & skin beauty). இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால்சருமத்திற்கு நல்ல பளபளப்பை கொடுக்கும்.
அனைத்து வகையான சருமத்திற்கும் பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், சருமமானது இதனை விரைவில் உறிஞ்சிக் கொள்ளும். வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. உடலை பாதாம் எண்ணெய் கொண்டு அடிக்கடி மசாஜ் செய்தால், சருமம் மென்மையாவதோடு, அழகாக ஜொலிக்கும் (Almond oil & skin beauty).
பாதாம் பருப்பு (Almond) உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தருவது போல , அதன் எண்ணெய் சருமத்திற்கு ஆரோக்கியத்தையும் ,மிகுந்த அழகையும் தருகிறது. இயற்கையான எல்லா எண்ணெய்களும் சருமத்திற்கு நல்ல அழகைத் தரும் என்றாலும் ,அவை அனைத்திலும் பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது.
சரும பராமரிப்பிற்கு மற்ற இரசாயனம் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட, பாதாம் எண்ணெயை பயன்படுத்தினால் அதிக ஆரோக்கிய நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்.
முக சுருக்கம்
பொதுவாக இளவயதில் உள்ளவர்களுக்கு ஊட்டச் சத்துக்கள்குறைவு காரணமாகவே முக சுருக்கம் ஏற்படுகிறது. விற்றமின் ஏ, பி, பாதாம் எண்ணெயில் அதிகமாக இருக்கிறது. ஆகவே அதனை அதிகம் பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கும்.
நடுத்தர வயதில் உள்ளவர்களும் பாதாம் எண்ணையைப் பயன்படுத்தி வர , முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி
புதிய செல்களும் உருவாகும். இதனால் முகமானது நன்கு பொலிவோடும், இளமையான தோற்றத்தோடும் இருக்கும்.
உதடு வெடிப்பு
உதட்டில் வெடிப்புகள் இருந்தால் அதற்கு பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வு தரும். 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். உதட்டில் வறட்சியை உணரும் போதெல்லாம் பூசிக் கொள்ளவும். உதடுகளில் வெடிப்புகள் அகன்று உதடுகள் மென்மையாகவும், அழகான நிறத்தையும் பெறும்.
கருவளையங்கள், கரும்புள்ளிகள்
பாதாம் எண்ணெய் (Almond oil) முகத்தில் தோன்றும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் எளிதில் நீக்கி விடுகிறது.
ஒவ்வொருநாளும் பாதாம் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழும் கரும்புள்ளிகள் மீதும் தடவிசி றிது நேரம் மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால், கரும்புள்ளிகளும்,கருவளையங்களும் அகன்று , முகம் பளிச்சென்று ஆகும்.
சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப்
பாதாம் எண்ணெயும் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேற்றிவிடும்.
இதற்கு 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் பூசி காய வைத்து பின்னர் கழுவ வேண்டும். இதனால் முகமானது புதுப் பொலிவுடன் அழகாக காட்சி அளிக்கும்.
ஏனைய இயற்கை பொருட்களுடன் சேர்ந்து பாதாம் எண்ணெய் கொடுக்கும் அழகு
தேனுடன் பாதாம் எண்ணெய்
1 தேக்கரண்டி தேன் ,½ தேக்கரண்டிபாதாம் எண்ணெயை ஒன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவி இரவு முழுவதும் உலர விடவும்.
அடுத்தநாள் காலையில், இளஞ்சூட்டு நீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் 2 முதல் 3 முறை செய்துவர அழகான மற்றும் மேன்மையான சருமத்தைப் பெறலாம்
ரோஸ் வாட்டருடன் பாதாம் எண்ணெய்
ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி, பாதாம் எண்ணெயை ½ தேக்கரண்டி சேர்த்து, இதனை இரவு முகத்தில் தடவி உலர விடவும். மறு நாள் காலையில், மென்மையான சுத்தமான துணி ஒன்றினால் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.
வாரத்திற்கு 3 முதல் 4 முறை இப்படி செய்துவர அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற முடியும்.
பாலுடன் பாதாம் எண்ணெய்
2 தேக்கரண்டி பால் , ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை இந்தக் கலவையை முகத்தில் தடவி விடுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து முகத்தை இளஞ்சூட்டு நீரால் கழுவவும். இது முகத்தை சுத்தப்படுத்தும் கருவியாக செயற்பட்டு, அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் கொடுக்கும். இதை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.
கற்றாழை ஜெல்லுடன் (aloe vera) பாதாம் எண்ணெய்
கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் ½ தேக்கரண்டி சேர்த்து கலந்து பூசி ,5-10 நிமிடங்கள் உங்கள் சருமத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் வெவெதுப்பான நீரால் சுத்தம் செய்யவும்.இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து பாருங்கள். அழகான ஜொலிஜொலிக்கும் சருமத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.