உடற்பலம் பெருக்கும் பாதாம் கஞ்சி (Almond porridge)

பாதாம்… பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும்.
பாதாமில் உள்ள பி விற்றமினும் அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நல்லதொரு கஞ்சி.
இரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் உணவு வகைகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இரத்த அணுக்கள் இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், மற்றும் ஃபோலிக் அமிலம், விற்றமின் “பி’ என்பன அவசியமாகும்.
ஈரல்,நாவல் பழம் ,அவரை ,பீட்ரூட்,பால்,கருவாடு ,கோதுமை, வெல்லம் ,கேழ்வரகு ,கம்பு, ஆட்டிறைச்சி ,கொள்ளு ,மீன்,கீரை வகைகள், எள்ளு,உலர்ந்த பழங்கள் ,நட்ஸ் வகைகள் மொச்சை,பாகற்காய் ,பப்பாளி,சுண்டங்காய் மாதுளை,பேரீச்சம்பழம், சப்போட்டா போன்றவைகளில் இரும்புசத்து நிறைந்துள்ளது.
பாதாம் கஞ்சி செய்ய தேவையானவை (Ingredients for Almond porridge)
பாதாம் பருப்பு – 10
புழுங்கல் அரிசி – 1 கரண்டி
நாட்டுச்சர்க்கரை- 50 கிராம்
உப்பு – 1 சிட்டிகை
பசும் பால் – 2 கப்
விரும்பினால் ஏலக்காய் – 3 சிட்டிகை
புழுங்கல் அரிசிக்கு பதில் பாரம்பரிய அரிசி வகைகளான கறுப்புக்கவுனி,மாப்பிள்ளைசம்பா,பூங்கார் போன்ற ஏதேனும் ஒன்றையும் சேர்த்து செய்யலாம்.
சுவையும் சத்தும்இன்னும் கூடுதலாக கிடைக்கும்!
பாதாம் கஞ்சி செய்முறை (Almond porridge recipe)
கஞ்சி செய்வதற்கு முதல் நாள் இரவு பாதாம் பருப்பையும், புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக தண்ணீரில் ஊற வைத்து விடவும்.
மறுநாள் காலை பாதாம் பருப்பின் தோலை உரித்துவிட்டு அரிசி மற்றும் பாதாம் பருப்பை தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு மையாக அரைக்கவும்.
வாயகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்துஅரைத்த கலவையை ஊற்றி கிளறவும்.
அதில் இரண்டு கப் பசும் பாலை விட்டு தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் கலந்து இறக்கவும்.
உடலை பலப்படுத்தும் சுவையான பாதாம் கஞ்சி (Almond porridge) தயார்.
பலவீனமான உடலை பலப்படுத்தும் சக்தி பாதாமுக்கு உண்டு. தினமும் சாப்பிடும் காலை உணவோடு பாதாம் அரிசி கஞ்சியும் எடுத்துக் கொள்ளலாம்.
உடலுக்கு தேவையான அதிக சத்துக்களைத் தரும் சிறந்த காலை உணவாகும்!