தினந்தோறும் சிறிதளவு பாதாம் (Almonds daily)
தினந்தோறும் பாதாம் (Almonds daily) உண்டு வந்தால் உடலில், கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு கூடுகிறது.
பாதாமில் விற்றமின்களும் தாதுசத்துகளும் அதிகமிருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய், சருமக் கோளாறுகள் (Skin problem), பற்பாதுகாப்பு, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, பித்தப்பைக்கல் போன்றவற்றை போக்குவதற்கு பாதாம் (Almond) துணை நிற்கிறது.
புரதம், நார்சத்தோடு உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இதில் உள்ளது.
அதோடு வைட்டமின் E, துத்தநாகம், சுண்ணாம்பு சத்து (Calsium), இரும்பு சத்து, பாஸ்வரம்,தாமிரம், பொட்டாசியம், செலோனியம் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளது. புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.
இன்னும் என்ன நன்மைகளை பெறமுடியும் என்பதை வீடியோவில் பார்ப்போம்.
பாதாமில் உள்ள போலிக் அமிலம் இரத்தக் கலைகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பெரும் பங்கு வகிக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரழிவு (Diabetes) நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

பாதாமில் நார்சத்து அதிகம் இருப்பதால் ,மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பார்கள்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதி நோயை பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
பற்களால் அரைத்தது சாப்பிட முடியாவிட்டால் பாதாமை ஊறவைத்து அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி அருந்தலாம்.சரும அழகை மேம்படுத்துகின்றது.
அழகுகலையில் பாதாம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.பாதாம் தலைக்கு வைக்கும் எண்ணெய் (Hair oil),சோப், ஷாம்பூ, சருமத்திற்கான எண்ணெய் (almond skin oil ) என பலவிதமான அழகை அதிகரிக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
இப்படிப்பட்ட சக்தியை உடைய பாதாமில் தினமும் 5 பாதாமை (Almonds daily) நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபோஸ் என்கிற நொதி வெளிவருகிறது. இதனை உண்ணும் போது உணவுகள் எளிதில் செரிமானமடைகிறது.
ஊற வைத்து பாதாமை சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்பா டகோபெரோல் என்ற பொருள் அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு போலிக் அமிலம் போதுமான அளவு கிடைப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது. பிறப்பு குறைபாடுகள் குறைகின்றன.