ஆலோவேரா (Aloe vera) என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் கோலோச்சி வரும் காயகற்ப மூலிகை.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்,தழும்புகள்,வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச்சாறை (Aloe vera beauty tips) தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தை பாதுகாக்கிறது.
சூரிய ஒளியுடன் கலந்து வரும் கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு கற்பக மூலிகை இது.
பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன.
இவை தவிர விற்றமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கல்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச்சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.
எந்த வகையான சருமமாக இருந்தாலும் சோற்றுக் கற்றாழையை (Aloe vera beauty tips) பயன்படுத்தலாம்.
முகப்பருக்கள் நீங்க (Pimples get rid of)
தினசரி முகத்தில் சிறிது கற்றாழை ஜெல்லைத் தடவி, சிறிதுநேரம் உலரவிட்டுப் பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இப்படி தினசரி செய்து வரும் பொழுது முகத்தில் பொலிவு வருவதோடு மட்டுமல்லாமல், முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகளும் கட்டுக்குள் வரும்.
முகப்பருவினால் ஏற்படும் வடுக்களை சரிசெய்யவும் சோற்றுக் கற்றாழை (Aloe vera beauty tips) உதவுகிறது.
இதில் உள்ள பல்வேறு நன்மைகள் காரணமாகத்தான் அழகு சாதனப் பொருட்களில் பெருமளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.
பாதிப்படைந்த இடங்களில் இந்த ஜெல்லை தடவி குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
முகத்தில் கருமை அகல
சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
கரும்புள்ளிகள் நீங்க
ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு(Aloe vera beauty tips for Oily skin)
கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
சென்சிடிவ் சருமம் (Sensitive skin)
சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
தலைமுடி நன்கு வளர (Aloe vera beauty tips for hair)
முடி உதிர்வு , வழுக்கை தெரியும் நிலை,முடி வளரவில்லை என்பவர்களுக்கு இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த ஜெல் மிகவும் பயன் தரும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு 1/4 கப் அலோ வேரா ஜெல்(Aloe vera gel) ,அதில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் (castro-oil) சேர்த்து நன்றாக கலந்து இந்த ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இந்த ஜெல் உங்களுடைய தலையில் ஊறலாம். அதன் பின்பு சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.
இப்படி வாரத்தில் ஒருநாள் செய்தாலே போதும். 3 மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை காண முடியும்.
இதற்கு விளக்கெண்ணை மட்டுமல்ல விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்ப் பால் ,தேங்காய் எண்ணெய், முட்டையின் வெள்ளைக்கரு என ஏதாவது ஒரு பொருளை மட்டும், கற்றாளை ஜெல்லோடு சேர்த்து கலந்து தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நரைமுடி எட்டிப் பார்க்கும்போதே இதை செய்ய தொடங்கினால் நரைமுடி அதிகமாக பரவுவது குறையும்.
கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.
தோல் அரிப்புக்கு (For skin irritation)
கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.
வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.