முக அழகிற்கு கற்றாளை பேஸ்பேக்(Aloe Vera Face pack)
கற்றாழை – வேப்பிலை பேஸ்பேக் (Aloe Vera Face pack)
தேவையான பொருட்கள்
ஒரு சிறிய அளவு கற்றாழை இலை
வேப்ப இலை பொடி ஒரு தேக்கரண்டி
தேன் (விரும்பினால்)
கற்றாழை – வேப்பிலை ஃபேஸ் பேக் செய்யும் முறை(Aloe Vera Face pack)
கற்றாளை ஜெல்லை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன், ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பொடி அல்லது ஒரு கைப்பிடி வேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தும், பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின்னர் இந்த ஜெல்லை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
இரவில், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு, ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவவும்.
அதை 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
பின்னர் முகத்தைத் தண்ணீரில் கழுவி கொள்ளவும். உங்கள் சருமத்தில் நல்ல தீர்வினை காண வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்திய அடுத்த நாள் காலையில் உங்கள் முகத்தில் நிச்சயமாக சிறிதளவு மாற்றங்களை கவனிக்க முடியும். உங்கள் சருமம் வழக்கத்திற்கு மாறாக மென்மையாக இருப்பதை உங்களால் உணர முடியும்.
அதே நேரத்தில் ஒரு வாரம் இதை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் இயற்கையான பளபளப்பு தன்மை வருவதோடு, உங்கள் சருமம் மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
எந்த வகையான சருமமாக இருந்தாலும் சோற்றுக் கற்றாளையை நாம் பயன்படுத்தலாம்.
சூரிய ஒளியில் ஏற்படும் கருமை நிறத்தை சரிசெய்ய கற்றாழை பெருமளவில் உதவுகிறது. மேலும் இதில் இயற்கையிலேயே ஈரப்பதம் நிறைந்திருப்பதால் சருமத்தை எளிதில் குணப்படுத்துகிறது.
தினசரி குளிக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த பொடியில் தயிர் அல்லது பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இதை உங்கள் சருமத்தில் தடவி, குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வர உங்கள் முகத்தில் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம்.
தனித்தனியாக இவ்வளவு நன்மைகள் கொண்ட சோற்றுக்கற்றாழை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது, மேலும் அதிக நன்மைகளை நம்மால் பெற முடியும்.
கற்றாழை பேஸ் பேக் #2(Aloe Vera Face pack)
இந்த ஃபேஸ் பேக்(Aloe Vera Face pack)வறட்சியான சருமத்திற்கு ஏற்றது.
அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை ஃபேஸ் பேக் #3
இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும்.
அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை ஃபேஸ் பேக் #4
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.