கூந்தல் அழகிற்கு கற்றாழையின் வியத்தகு பயன்கள் (Aloe Vera & hair beauty)

முடி உதிர்தல் tஹடுப்பது மட்டுமல்லாமல் கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டும் (Aloe Vera & hair beauty) என்சைம்கள் உள்ளன.கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து.

அவை தலையில் உள்ள இறந்த செல்களை அழித்து புது செல்களை வளர செய்கின்றன. எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.

கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற  பிரச்சனைகள் அனைத்திற்கும்

தீர்வு தரும் தாவரம் கற்றாழை.கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. 

கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

alovera-gel,அலோ வேரா ஜெல்,அன்னைமடி,annaiamdi.com,கூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்,Aloe vera benefits for hair,What types of aloe vera gel is used for hair?,கற்றாளை,உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளிக்கும் கற்றாளை,Aloe vera benefits from head to toe,Aloe vera recipes,கற்றாளை உணவு செய்முறைகள்,Aloe Vera & hair beautyகற்றாழை பேக்

எந்த ஹேர் பேக் போட்டாலும் எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தாலும் முடி வளரவில்லை என்பவர்கள், சிரமம் பார்க்காமல் இந்த ஒரு டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

வாரத்தில் ஒரு தரம் வீதம்  பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் ஏற்படும் நல்ல மாற்றத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய் ,கற்றாழை ஜெல் இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலைப் (Aloe Vera & hair beauty) பெறலாம். இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

இதுவரைக்கும் முடி வளராத தலையில கூட, முடியை வளர வைக்க முடியும். அலோ வேரா ஜெல்லோடு இந்த 1 பொருளை சேர்த்து இப்படி யூஸ் பண்ணி பாருங்க. 

ஒரு சிறிய கிண்ணத்தில் அலோ வேரா ஜெல் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு 1/4 கப் அலோ வேரா ஜெல் இருந்தால் அதில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் (Castro-oil) சேர்த்து நன்றாக கலந்து இந்த ஜெல்லை உங்களுடைய தலையின் மண்டையோட்டில் படும்படி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

அதாவது மயிர்க்கால்களில் இந்த அலோவேரா ஜெல் நன்றாக படவேண்டும். அதன் பின்பு முடிக்கு மேல் பக்கம் மேலிருந்து கீழ் பக்கம் வரை முடி முழுவதும் இந்த ஜெல்லை பூசிக் செய்து கொள்ளவும்.

30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இந்த ஜெல் உங்களுடைய தலையில் ஊறலாம். அதன் பின்பு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்கவும்.

இப்படி வாரத்தில் ஒருநாள் செய்தாலே போதும். மாதத்தில் 4 நாட்கள் கணக்கு வரும். மொத்தமாக 3 மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை காண முடியும்.

விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்ப்பால்,தேங்காய் எண்ணெய் அல்லது  முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்ளலாம்.

இப்படி இதில் உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ, அந்த ஒரு பொருளை மட்டும், இந்த அலோ வேரா ஜெல் லோடு சேர்த்து கலந்து பேக்காக உங்களுடைய தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஹேர் பேக்கை பூசி கொள்வதற்கு முன்பாக தலையில் இருக்கும் சிக்கு அனைத்தையும் எடுத்து விட வேண்டும். தலையில் கட்டாயமாக நீங்கள் எப்போதும் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்புதான் ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும். alovera-gel,அலோ வேரா ஜெல்,அன்னைமடி,annaiamdi.com,கூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்,Aloe vera benefits for hair,What types of aloe vera gel is used for hair?,கற்றாளை,உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளிக்கும் கற்றாளை,Aloe vera benefits from head to toe,Aloe vera recipes,கற்றாளை உணவு செய்முறைகள்,Aloe Vera & hair beauty

 கற்றாழை ஜெல் கூந்தலுக்கு தரும் பயன்கள் ( Benifits of Aloe Vera & hair beauty)

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த அலோ வேரா ஜெல் மிக நல்லது.

தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும்  வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.

கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும் போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது.

முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கற்றாழை தந்து, முடியை பாதுகாக்கிறது.

இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

கற்றாழை தலை முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது.

எனவே கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *