கற்றாழையை உணவில் சேர்ப்பது எப்படி? (Aloe vera recipe)
கற்றாழையில் சோற்றுக்கற்றாழை தான் உணவாகப் (Aloe vera recipe) பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக்கற்றாழை தான் என்பதால் அதைத் தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.
கற்றாழை வகைகளில் செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது, எனினும் அது இப்போது கிடைப்பதில்லை.
மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.
கற்றாழை நூங்கு போன்ற சதைப் பகுதியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.கற்றாழையில் குழம்பு பொரியல் ,ஜூஸ், ஊறுகாய்,மசாலா மோர் போன்றன செய்யலாம்.
கற்றாழையின் இலைக் கதுப்பு (ஜெல்) மற்றும் வேர், மருத்துவப் பயன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது.
உடலில் வியர்வை பெருக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் கற்றாழை செயற்படுகிறது.மலத்தையும் இலகுவாக வெளியேற்றும்.
பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன.
இவை தவிர விற்றமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கல்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai milkshake recipe )
தேவையான பொருட்கள்
-
1/2 கற்றாழை
-
வாழைப்பழம்
-
ஸ்பூன் தேன்
-
5 ஐஸ் கியூப்ஸ்
-
5 பாதாம்
-
1/2 டம்ளர் பால்
கற்றாழையை சரியான முறையில் கழுவி அதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஸ்ராவ்பெர்ரி ,மாதுளை போன்ற எந்த பழங்களையும் விருப்பம் போல் சேர்த்து செய்யலாம்.அற்புத சத்து.நல்ல சுவை.
கற்றாழை மசாலா மோர் (Aloe vera recipe)
கருவேப்பிலை, புதினா,கல்லுப்பு கொத்தமல்லி,தேங்காய்,மிளகாய் சேர்த்து அரைத்து அந்த கலவையை மோரில் தேவையான நீர் விட்டு கலக்கி குடிக்கலாம்.
இன்னொரு சுவையில் பசுந்தயிரை மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் , இஞ்சி ,கற்றாழை ஜெல்லை கலந்து மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம்.
மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தின் அமுது. வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கும்.
கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும். பித்தமும் குறையும்.
கற்றாழை ஊறுகாய் (Aloe vera pickle recipe)
கற்றாழையை எப்படித் தேர்வு செய்வது?(How to choose Aloe vera?)
நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில் தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும்.
அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும்.
கற்றாழையை எப்படித் தயார் செய்வது?(How to prepare Aloe vera?)
இதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெலி(Gel) போன்ற சதைப் பகுதியை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும்.
ஏழு முறை கழுவும்போது தான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். அதாவது இதில் இருக்கும் கைப்பு தன்மையைப் போக்க ,அதிக தரம் நீரால் கழுவ வேண்டியுள்ளது.இல்லையெனில் அது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கற்றாழை ஜூஸ் (Aloe vera recipe)
கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.
தற்போது உடற்பயிற்சிக்காக நடப்பவர்களை விட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். இப்போது நடைப்பயிற்சிக்காக மக்கள் சேரும் இடங்களில் கற்றாழை ஜூஸ் விற்பனை நடக்கிறது.
நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே!
கற்றாழை ஜூஸ் குடிக்கும் முறை
1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது.
2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது.
3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.
4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
இதில் எந்த வகையில் தயார் செய்து குடித்தாலும், அதைத் தயாரித்த அரை மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும்.
அதற்கு மேல் தாமதப்படுத்திக் குடித்தால், பலன் தராது. மேலும், கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.
காலை நேர நடைப்பயிற்சியுடன் கசப்பு, புளிப்பு சேர்ந்து கடைசியில் நாவுக்குப் பிடித்த இனிப்புச் சுவையையும் தரும் கற்றாழை ஜூஸ், உடலுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும்.புத்துணர்வும் புதுப்பொலிவும் தரும்!
ஒருவரின் ஆரோக்கிய உடல்நிலையைப் பொறுத்து 1 – 6 வாரங்கள் வரை கற்றாழை ஜூஸ் அருந்தலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளி விட்டு, மீண்டும் தொடரலாம்.
கற்றாழை தரும் அதி அற்புத பயன்கள் (Amazing medicinal benefits of Aloe vera)
உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது. சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே.
கற்றாழை பெண்களுக்கு மிக சிறந்தது. நாள்பட்ட மாதவிடாய்,வெள்ளைபடுதல், கருப்பை பிரச்சனை,நீர்கட்டி ,குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்.
உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.