நெல்லிக்காய் மிட்டாய் (Amla candy recipe)
நெல்லிக்காயை எப்படி உணவில் சேர்க்கலாம்
நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஆனால்,நெல்லிக்காயின் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை சாப்பிடுவதில்லை.அப்படியானவர்கள் நெல்லிக்காயிலுள்ள சத்துக்களை பெற நெல்லிக்காய் சாதம்,நெல்லிக்காய் ஜூஸ்,நெல்லிக்காய் துவையல்,நெல்லிக்கியா மிட்டாய் (Amla candy recipe) என உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
எண்ணற்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டது நெல்லிக்காய்.இதனால் தான் சித்த,ஆயுள்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் மிட்டாய் வீட்டிலே செய்யும் முறையைப் பார்ப்போம்.
நெல்லிக்காய் மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் மிட்டாய் செய்முறை (Amla candy recipe)
நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்
நெல்லிக்காய்களில் பல வகையான விற்றமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இந்த விற்றமின் ஏ கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து , கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது.
நெல்லிக்கனியை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.