நெல்லிக்காய் துவையல் (Amla chutney)

நெல்லிக்காயில்  எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளது. நெல்லிக்காயில் துவையல் (Amla chutney) செய்வது எப்படி எனவும் பார்ப்போம். ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும்.

நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது. உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும்.

இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும்.

நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு அதிக  வாய்ப்புகள் இருக்கின்றது.

நெல்லிக்காயில் அதிக துவர்ப்புசத்து உள்ளது.

நெல்லிக்காயை பச்சையாக அப்படியே சாப்பிடலாம். நெல்லிக்காயின் துவர்ப்பு ,ஒருவித கசப்பு தன்மையால் சிலர் அப்படியே சாப்பிட விரும்பமாட்டார்கள்.அதனால் அதிலுள்ள அளவற்ற சத்துக்களைப் பெற ,நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது. நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் துவையல் (Amla chutney), நெல்லிக்காய் சாதம்,நெல்லிக்காய் இனிப்பு என விரும்பிய மாதிரி உண்ணலாம்.

நெல்லிக்காய் துவையல் (Amla chutney) செய்வது எப்படி என வீடியோவில் பார்க்கலாம்.

மற்றும் ஆஸ்துமா , சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,சர்க்கரை நோய், போன்றவற்றை குணமாக்கும்.தாகத்தை தணிக்கும்.amla chutney,annaimadi.com,amla receipe,nellikkai thuvaiyal,nellikkai receipe,indian receipe,healthy chutney

நெல்லிக்காய் நாளும் பெறமுடியாதவர்கள் நெல்லிக்காய் பவுடரை (Amla powder) வாங்கி பயன் பெறலாம்.

பழைய காலத்தில் பெண்கள் இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தி அவர்களின் சரும அழகு மற்றும் கூந்தல் அழகைப் பராமரித்தனர்.

அவர்கள் பயன்படுத்திய கூந்தல் பராமரிப்புக்கான ஒரு முக்கிய பொருளில் ஓன்று  நெல்லிக்காய்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அருந்த வேண்டிய ஒரு ஊட்டச் சத்துமிகுந்த பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் நார்ச்சத்து, உடலில் எடை அதிகரிப்பதை தடுத்து. உடல் எடையை குறைக்கிறது.
நெல்லிக்காய் உடலில் ஏற்கனவே இருக்கின்ற அதிக கொழுப்புச்சத்துக்களை கரைத்து, அவற்றை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி உடல் எடையை குறைக்கிறது.

நெல்லிக்காயை உணவிலும் எடுத்துக் கொள்வதோடு ,வெளிப்புறமாக  கூந்தலுக்கு நெல்லிக்காய் பவுடரை பூசி குளிப்பதால் கூந்தால் கருகருவென அடர்த்தியாக வளரும். இளநரையும் நீங்கும்.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாகிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் உட்கொள்வதால், இந்த வைட்டமின் உடலில் அதிகமாகிறது. இதனால் முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் தடுக்கப்பட்டு முடி வலிமை அடைகிறது.

கண்களுக்கு மிக அழுத்தம் தரும் வகையிலான பணிகளை மேற்கொள்வதால் எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவாக நெல்லிக்காய் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.