கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது (How to control anger)

அழுகை, பயம், சந்தோசம் போன்று  கோபமும் ஒரு உணர்வு தான்.கோபம் ( Anger) ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை. பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோருக்கும் கோபம் ஏற்படுகிறது.

எனவே கோபமே படக்கூடாது என சொல்வது தவறாகும். ஒரு குழந்தை தவறு செய்யும்போது அம்மா அதை அதட்டுவது ஒரு வகை கோபமே. அது தவறல்ல. ஆனால் அது குழந்தை பலமாக அடிக்கும் வகையில் வெளிப்படுவது தவறு.வீட்டில் இருக்கும் மற்றவரகளை  இது கோபப்படுத்தும் செயலாகி விடும்.

இது பிரச்சனைகளை உருவாக்கும் காரணியாகி விடும்.

சின்ன சின்ன கோபங்கள் ஏற்படுவது ஏற்றுகக் கொள்ளக் கூடியதே..அதைக் கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும்.இல்லையேல் அது பெருங் கோபமாகி விடும்.

ஒரே வரியில் சொல்வதனால் நாம் நினைத்த மாதிரி நடக்காத போது  எமக்கு பிடிக்காதவை நடக்கும்போது கோபம் ஏற்படுகிறது.

நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும்போது, எழுதும்போது,கேட்கும்போது,படிக்கும்போது,செய்யும்போது…..
இப்படி பல சந்தர்ப்பங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.

நீங்கள் அதிகம் அல்லது அடிக்கடி கோபப்படுபவரா? 

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது (How to control anger) என்று அடிக்கடி யோசித்தாலும் ,கோபம் வரும் போது அதனைக்  கட்டுப்படுத்த முடியவில்லையா. கீழே குறிப்பிடப்படும் வழிகளை செய்து பாருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

கோபம் ( Anger) எப்படியெல்லாம் வெளிப்படுகிறது?

1. வெறுப்பு
2. பழிவாங்குதல்
3. அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
4. தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
5. அடித்தல்/வன்முறை
6. முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல் (பாடிலாங்குவேஜ்)

annaimadi.com,anger,how to control anger,how to overcome anger,how to control anger with child,ways to control anger,  Problems caused by anger,Changes in the body caused by anger

ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல்,

தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது,

மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது

இது போன்று பல விதமாக கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.

இவை அதிகமாகும் போது பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கோபப்படுவதால் ( Anger) உடலில் ஏற்படும் மாற்றங்கள்

1. இதய துடிப்பு அதிகரிக்கிறது.
2. இரத்த அழுத்தம் அதிகமாகிறது
3. சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
4. தசைகள் வேகமாக இயங்குகின்றன.
5. மூச்சு விடுதல் வேகமாகிறது.
6. மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
7. உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

கோபப்படுவதால் ( Anger) உண்டாகும் பிரச்சினைகள்

நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்… (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது). கோபப்படும்போது இதயம் வேகமாக துடிப்பதால், அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கொழுப்பு/சர்க்கரை வியாதி இருந்தால் அவ்வளவுதான்!

கோபப்படும்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் மேற்கண்ட பிரச்சினை இரட்டிப்பாகிறது.
கோபப்படும்போது நம் உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைகிறது.

சரி இவ்வளவுதானா! என்றால் இல்லை…
சிலர் கோபமாக இருக்கும்போது.. சிகரெட், மது போன்றவற்றை தேடி செல்கின்றனர். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். சிலர் நாள்பட்ட கோபத்தை டிவி, கம்ப்யூட்டர் முன் நேரத்தை கழிப்பதன் மூலம் மறக்கப் பார்க்கின்றனர்.

இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..
 வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
 சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
 உடல்நலத்தை பாதிக்கிறது.
 உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.

கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

சிலர் கோபம் வரும்போது 1 முதல் 10 வரை எண்ணச் சொல்வார்கள். ஆனால் இது பலருக்கு பலனளிப்பதில்லை.
குறிப்பிட்ட விஷயங்களிலோ, அல்லது குறிப்பிட்ட நபரிடமோ உங்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்பட்டால்… அது ஏன் ஏற்படுகிறது என மூல காரணத்தை ஆராயுங்கள்.

annaimadi.com,anger,how to control anger,how to overcome anger,how to control anger with child,ways to control anger,  Problems caused by anger,Changes in the body caused by anger

உதாரணத்திற்கு ஒரு நண்பர் நீங்கள் அடிக்கடி பழகும் நபர் அவர். அவர் மீது அடிக்கடி கோபம் வருகிறது என்றால், அவர் உங்களுக்கு பிடிக்காத எதையோ அடிக்கடி செய்கிறார். அது என்ன என்று முதலில் கண்டுபிடியுங்கள்.

பிறகு அவர் அதை ஏன் செய்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கோபப்படுவது நியாயம்தானா என அறியுங்கள். ஒருவேளை அவர் வேண்டுமென்று செய்தால், அவரிடம் உங்கள் நிலையை விளக்கி மறுபடியும் அதுபோல் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை மீறி அவர் மீண்டும் அதை செய்தால், அவரிடம் பழகுவதை கைவிடுங்கள்.
ஒருவேளை நீங்கள் கோபப்படுவது நியாயமாக இல்லையென்றாலோ, அல்லது தவறு உங்கள் மீது இருந்தாலோ உங்களை திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.

நீங்கள் கோபப்பட்ட சூழ்நிலையை மனதில் நினைத்து பாருங்கள். அதில் நீங்கள் உங்கள் எதிராளியில் இடத்தில் இருந்து அவரின் உணர்வுகளை நினைத்து பாருங்கள்.

கோபம் வரும்போது, ஒன்று, இரண்டு என எண்ணுவதற்கு பதிலாக, ஒரு பிஸ்கட், இரண்டு பிஸ்கட் என பத்து வரை எண்ணுங்கள். பிஸ்கட் என்பதற்கு பதிலாக ஐஸ்கிரீம், லட்டு, வீடு , பூ  போன்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

நன்றாக எவ்வளவு தூரம் மூச்சு இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மூச்சு இழுத்து சிறிது அடக்கி வைத்து (1 முதல் 8 வரை எண்ணிய பிறகு) பிறகு மெதுவாக வெளியே விடவும். இதனால் வரும் கோபத்தை  குறைக்க அல்லது தவிர்க்க முடியும்.

annaimadi.com,anger,how to control anger,how to overcome anger,how to control anger with child,ways to control anger,  Problems caused by anger,Changes in the body caused by anger
கோபம் வரும்போது, உங்களுக்கு பிடித்தை நினைத்து கொள்ளுங்கள்.அது உங்களுக்கு பிடித்த உணவு, சினிமா, நடிகை, நண்பன்,இடம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கோபப்படும் போது ஒருதடவை முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள்.உங்கள் அழகிய முகம் உங்களுக்கே சகிக்க முடியாமல் இருக்கும். நீங்களாகவே முக பாவத்தை மாற்றிவிடுவீர்கள். அதோடு கோபமும் அடங்கிவிடும்.இது நல்ல பலன் தரும்.கண்டிப்பாக செய்து பாருங்கள்.

அண்ணல் உண்மை என்னவெனில் ,கோபம் வரும்போது இவற்றை செய்வது என்பது சாத்தியமற்றது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம், இப்படி செய்ய வேண்டும் என்ற ஞாபகமே வராது.

ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் கோபம் குறையும்.

யோகாபயிற்சி, தியானம்,நடைப்பயிற்சி  போன்றவையும் கோபத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிகள்.இவற்றையும் முயற்சிக்கலாம்.

annaimadi.com,anger,how to control anger,how to overcome anger,how to control anger with child,ways to control anger,  Problems caused by anger,Changes in the body caused by anger
சிலருக்கு கோபப்பட்டு சத்தம் போட்ட பிறகோ அல்லது வன்முறை செயலுக்கு(அடித்தல்/காயப்படுத்துதல்) பிறகோ தலைவலி/மயக்கம் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தொடர்ந்து கோபப்பட்டால் இவர்களின் உடல்நலம் சீக்கிரம் மோசமாகலாம்.

இங்கு சொல்லப்பட்ட  வழிமுறைகளை அடுத்த முறை  கோபப்படும் போது  பரிசோதித்து பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்!ஞாபகம் வைத்து செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.