இதய நலம் காக்கும் இருதய முத்திரை (Apana vayu mudra)

இதயத்தை பலப்படுத்த ,இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்,உடற்பயிற்சிகளோடு சேர்த்து, இருதய முத்திரையையும் ((Apana vayu mudra) தொடர்ந்து செய்வதன் மூலம், நல்ல முன்னேற்றத்தபெறமுடியும். இருதயமுத்திரையை அபான வாயு முத்திரை (Apana vayu mudra), மித்ரா சஞ்சீவனி முத்திரை என்றும் அழைக்கப்படும்.

நீண்ட ஆயுளோடு  வாழ்வதற்கு , ஒருவரது இதயம் என்பது நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் . அத்தகைய ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கு நல்ல உணவு பழக்கத்துடன்  சீரான உடற்பயிற்சியும் தேவை.

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் யோகா(Yoga). யோகா உடலுக்கு, மனதிற்கு சம அளவில் ஊட்டத்தை வழங்குகிறது. இதய  நலனுக்கான ஆசனத்தோடு சேர்த்து, இருதய முத்திரையையும் செய்யவும். இது பழகுவதற்கு மிக இலகுவானது.

தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வரும் போது, உடல்நிலையில் பல்வேறு நல்ல மாற்றங்களை காண்பதோடு, இதயத்தையும் ஆரோக்கியதையும் பெற்றிட  முடியும்.

Idhaya mudra, for heart health,yoga,heart protect,yoga for good heart,annaimadi.comCheck Price

இதயமுத்திரை((Apana vayu mudra) செய்யும் முறை
  • முதலில், பத்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.
  • பின்பு, கைகளை தொடைகளின் மீது மேல்நோக்கிய படி வைக்கவும்
  • ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். அது பெருவிரலின் அடிப்புறம் தொட வேண்டும்.
  • பின்பு பெருவிரலுடன் , நடுவிரலையும், மோதிரவிரலையும் இணையுங்கள்.
  • சுண்டுவிரல் நீட்டியபடி  அப்படியே இருக்கவும்.
  • பத்மாசனத்தில் உட்கார வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பத்மாசனம் செய்ய முடியாவிட்டால் சாதரணமாக சம்மணம் போட்டு அமர்ந்து செய்யுங்கள்.
  • காலை மடக்கி கீழே அமர முடியாதவர்கள் கதிரையில் அமர்ந்தபடியும் செய்யலாம்.
  • முழுக்கவனமும் இருதய முத்திரை செய்வதில் இருக்க ,கண்களை மூடிக் கொண்டு  செய்வது சிறந்தது.
  • இதற்கென எந்தவொரு கால அவகாசமும் இல்லை.இதயநோய் உள்ளவர்கள் அல்லது இதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி  இரு முறை 15 நிமிடங்கள் வீதம் செய்யலாம்.
  • இந்த முத்திரையை செய்யுங்கள். ஹார்ட் அட்டாக் கூட வராமல் தடுக்கப்படும்.

இதயமுத்திரை செய்யும் முறை வீடியோவில் !

 

இதயத்திற்கான முத்திரையின் (Apana vayu mudra) நன்மைகள் 

இதயத்தை ஆரோக்கியப்படுத்துவதோடு, இதயத் துடிப்பை சீராக்குகிறது.
வாயுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவுகிறது.
இந்த முத்திரையை செய்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கிறது.
இரத்த ஓட்டத்தையும் சீராக்கி கடும் நெஞ்சுவலியை போக்கிவிடும்.
மூட்டு வலியையும் போக்கும்.

இதனை முயன்று செய்து பாருங்கள்.தினமும் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் இதயம் ஆரோக்கியமாகும். ஆயுள் நீடிக்கும்.

நோய் தீரவேண்டும் என்று செய்பவர்கள், தினமும், ஒரு வேளைக்கு 15 நிமிடம் என இரு  முறை செய்தால் உடனடி பலன் நிச்சயம். 

மாரடைப்பை தடுக்க அபான வாயு முத்திரை உதவுகின்றது. அவ்வளவு உபயோகமான முத்திரை இது என்பது செய்து கொண்டு வரும் போது உங்களுக்கே தெரியவரும்!!

Leave a Reply

Your email address will not be published.