`கடவுளின் அமிர்தம்’ பெருங்காயம் (Asafoetida)

பெருங்காயத்தின் (Asafoetida) மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு.

சமீப காலத்தில் உலவிவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது.

பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள். அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள். இதுபெருங்கயத்தின் ஆற்றலிற்கு  பெரும் உதாரணம்.

பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் திறன் கொண்டது பெருங்காயம். 

ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும் தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது.இந்த நாடுளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்து தான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

கூட்டுப் பெருங்காயம் என்பது என்ன?

முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதைப் பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள்.

கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள். அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது.அசபொட்டிடா ,Asafoetida,annaimadi.com,அன்னைமடி,கூட்டுப் பெருங்காயம்,பெருங்காயப் பொடி பயன்படுத்தும் முறை,How to use Asafoetida powder,பெருங்காயம் தரும் பெரிய பலன்கள் Benefits of Asafoetida,how to find the original Asafoetida,பெருங்காயப் பொடி,அங்காயப் பொடி,அங்காயப் பொடி,குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுக்கு மருந்து,வயிற்றுவலி போக்கும் பெருங்காயம்

காரம் மிக அதிகமாக இருக்கும். ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்.

பெருங்காயப் பொடி பயன்படுத்தும் முறை (How to use Asafoetida powder)

குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி.

சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப்பொடியில் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை  பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் வயிற்றுவலி சரியாகிவிடும்.

வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.

சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.

தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.அசபொட்டிடா ,Asafoetida,annaimadi.com,அன்னைமடி,கூட்டுப் பெருங்காயம்,பெருங்காயப் பொடி பயன்படுத்தும் முறை,How to use Asafoetida powder,பெருங்காயம் தரும் பெரிய பலன்கள் Benefits of Asafoetida,how to find the original Asafoetida,பெருங்காயப் பொடி,அங்காயப் பொடி,அங்காயப் பொடி,குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுக்கு மருந்து,வயிற்றுவலி போக்கும் பெருங்காயம்

அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும் போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும் போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது  நல்லது. 

 சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை (Asafoetida)எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெருங்காயத்தை சரியாக பார்த்து  தானா?

இதனால் பெருங்காய (Asafoetida) தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன.

மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும். இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது.

நீங்கள் வாங்கும் பெருங்காயம் (Asafoetida)உண்மையானது தானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும்.அசபொட்டிடா ,Asafoetida,annaimadi.com,அன்னைமடி,கூட்டுப் பெருங்காயம்,பெருங்காயப் பொடி பயன்படுத்தும் முறை,How to use Asafoetida powder,பெருங்காயம் தரும் பெரிய பலன்கள் Benefits of Asafoetida,how to find the original Asafoetida,பெருங்காயப் பொடி,அங்காயப் பொடி,அங்காயப் பொடி,குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுக்கு மருந்து,வயிற்றுவலி போக்கும் பெருங்காயம்

கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும். இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை மட்டுமே பயன்படுத்துவோம்.

பால் பெருங்காயத்தில் (Asafoetida)கோதுமை, கருவேல பிசினின் கலப்பு குறைவாகவே இருக்கும். சில லேகியங்கள், சூரணங்கள் தயாரிப்பில் பால் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம்.

எனவே, தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத்தை வாங்கிப் பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு.

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள் (Benefits of Asafoetida)

தினமும் ஒரு கிளாஸ் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கல்சியமும் பெருகும்.

லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் கிட்டே அண்டாது. 

நல்ல, தரமான பெருங்காயம் (Asafoetida)வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். annaimadi.com,அன்னைமடி,அங்காயப் பொடி,குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுக்கு மருந்து,வயிற்றுவலி போக்க

மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.

பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனையையும் இது சீர் செய்யும்.

மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 

குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (Lochia) வெளிப்படும்.

அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும்.

அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும்.

இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும்.

ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

Leave a Reply

Your email address will not be published.