அமுக்கராக்கிழங்கின் மருத்துவ பயன்பாடு (Medicinal use of Ashwagandha)

அமுக்கிராகிழங்கு அல்லது அசுவகந்தம் (Ashwagandha) என்னும் மூலிகை கசப்புச் சுவையும், துணைச் சுவையாக துவர்ப்பும், உஷ்ண வீரியமும் கொண்டு இருக்கும். அத்துடன் இதில் உடலை வளர்க்கும் வேதியியல் பொருள்களும், புரதங்களும், அமினோ அமிலங்களும் நிறைந்து உள்ளது.

மருத்துவப் பயன்கள்  (Medicinal use of Ashwagandha)

இருமல், இழுப்பு, வெண் குஷ்டம், க்ஷயம், நஞ்சு, ரணங்கள் ஆகிய அனைத்தையும்  அமுக்கிராக் கிழங்கின் சாறு போக்க வல்லது.

அமுக்கிராக் கிழங்கின் சாரத்தை தேன், நெய்யுடன் உட்கொள்ளச் செய்தால் இழுப்பு நோய் நீங்கும்.

அதோடு அமுக்கிராக் கிழங்கின் சாறு பாலுணர்வு, ஞாபக மறதி, தாய்ப்பால் சுரப்பு, நரம்புத் தளர்ச்சி, உடல் இளைப்பு ஆகிய அனைத்தையும் மேம்படுத்தும்.

அஸ்வகந்தா சூரணத்தை பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண் ஆகியவற்றிற்கு மேல் பூச்சாகப் பூச விரைவில் ஆறும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை அமுக்கிராக் கிழங்குக்கு  உண்டு.

 குழந்தைகளின் திடகாத்திரமான உடல் வளர்ச்சிக்கு அமுக்கிராக் கிழங்கு பெரிதும்  உதவுகிறது.

அமுக்கிராக் கிழங்கின் கஷாயத்தை இளஞ் சூட்டில் நெய்ப்பக்குவம் செய்து மாதவிடாய்க் காலத்தில் உட்கொண்டால் உடற்சோர்வு, அசதி என்பன உடன் நீங்கும், அதோடு மலடு நீங்கிப் பிள்ளைப் பேறு உண்டாகும்.

அமுக்கிராக் கிழங்கு நாள் பட்ட கல்லீரல் நோய்களை போக்கப் பயன்படுகிறது. அத்துடன் இது  குடல் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.

Medicinal use of Ashwagandha,annaimadi.com,ashwakandha,benefits of ashwakandha,good herbal,use of ashwakandha

Check Price

நமக்கு ஏற்படும் கட்டிகளின் மீது இந்த அஸ்வகந்தா இலையை அரைத்து பூசினால் கட்டியானது அமந்துவிடும். இதன் காரணமாக தமிழில் இதனை ‘அமுக்கிரா’ என்று அழைக்கிறார்கள்.

இந்த மூலிகையை குறைந்த அளவில் நெடுநாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், நம் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல விதமான முன்னேற்றத்தை காணலாம்.

தூக்கம் இன்மை இந்த அஸ்வகந்தாவின் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது.

நீரிழிவு நோய்க்கு அஸ்வகந்தா (Ashwagandha)

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

இந்த அஸ்வகந்தாவை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த அளவு உட்கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்பதனை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது.

ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அஸ்வகந்தா அரைத்து தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும். ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தாவை இயற்கையான காயங்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்தனர்.

பெண்களுக்கு ஏற்படும் வெண் கழிவு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை அஸ்வகந்தாவின் மூலம் குணப்படுத்த முடியும்.

Medicinal use of Ashwagandha,annaimadi.com,ashwakandha,benefits of ashwakandha,good herbal,use of ashwakandha

இளமையை பராமரிக்க

அரை ஸ்பூன் அஸ்வகந்தா உடன் நெல்லிக்காய் சாறு கலந்து தினமும் குடித்து வந்தால்,  சருமம் சுருக்கம் ஏற்படாமல் இளமையாக நீண்டகாலம் அழகுடன் இருக்கும்.

அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியுடன், தேன்,கற்கண்டு, நெய் கலந்து, உணவு அருந்திய பின் சாப்பிட்டு வந்தால், உடலுக்கும், நரம்புக்கும் புத்துணர்ச்சி ஏற்படும்.

இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிக்க வேண்டும்.

அஸ்வகந்தா மூலிகையை பயன்படுத்தும் முறை (Ashwagandha)

மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் அஸ்வகந்தா அவை உண்ணும் போது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

பொதுவாக இந்த அஸ்வகந்தா தூளினை ஒரு தேநீர் வடிவிலோ அல்லது பால், நெய், தேன் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடக்கூடாது.

ரத்தக்கொதிப்பு, வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது.

இயற்கையாகவே சிலருக்கு உடல் சூடான தன்மையைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது சில நாட்களில்அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் இந்த மூலிகையை பயன்படுத்தக்கூடாது.

இந்த அஸ்வகந்தா மூலிகையானது லேசான மயக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது. ஆகவே தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது.அது அதிகப்படியான தூக்கத்தை தந்துவிடும்.

 இதனை நாம் உட்கொள்வதற்கு முன்பு ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த அஸ்வகந்தாவின் நன்மைகளை அறிந்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால் அற்புதமான பலனை  அஸ்வகந்தா மூலிகை மூலம் நிச்சயம்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *