ஆஸ்துமாவிற்கு தீர்வு (Asthma)

ஆஸ்துமா (Asthma) குறைய……..அருநெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா உள்ளவர்கள் நெல்லி மரநிழலில் ஓய்வெடுப்பது நல்லது. ஏனெனில்  நெல்லிமரக்காற்று ஆரோக்கியமானது.

இன்றைக்கும் நெல்லி மரப்பட்டைகளை உப்பு, துவர்ப்பு உள்ள கிணறுகளில் போட்டு வைப்பார்கள்.

உப்பு மற்றும் துவர்ப்பு உள்ள நீரை சுவையாக மாற்றும் தன்மை நெல்லிப்பட்டைக்கும் நெல்லிக்காய்க்கும் உண்டு. தண்ணீர்ப்பானைகளில் கூட நெல்லிக்காய் அல்லது நெல்லிப்பட்டைகளை போட்டு வைத்தால் நீர்சுவையுடன் இருக்கும்.
நெல்லிக்காய்க்கு ஜீரண உறுப்புகளை நன்றாக செயல்படவைக்கும் ஆற்றல் உள்ளது.

அடிக்கடி நெல்லிக்காயை நெல்லிக்காய் சாதம், நெல்லி இனிப்பு,ஊறுகாய்  நெல்லிக்காய் துவையல் போன்று பலவிதமாக உணவில் சேர்த்து  சாப்பிடலாம்.

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு எல்லா நேரமும் நெல்லிக்காய் பெற்றுக் கொள்ள  முடியாமல் இருக்கும்.அவர்கள் நெல்லிக்காய் பொடிகளை (Amla Powder)  வாங்கி பயன்படுத்தலாம்.

மற்ற பழங்களில் உள்ள விற்றமின் ‘சி சத்து எளிதில் அழியக்கூடியது. காற்றாலும் வெப்பத்தாலும் கரையக்கூடியது. இவை உலர்ந்து போகும் போது விற்றமின் ‘சி’ அழிந்துவிடும். ஆனால் நெல்லியில் உள்ள டானின் என்ற பொருளால் நெல்லியின் மருந்துத்தன்மை நீண்ட நாள் சிதையாமல் இருக்கும்.
தினம் இரண்டு நெல்லிக்கனிகளையோ அல்லது நெல்லி வற்றலையோ 5 கிராம் அளவிற்குச் சாப்பிட்டால் நம் உடலிற்கு தேவையான அளவு விற்றமின் ‘சி’ கிடைத்து விடும்.

benefits of amla: Amla benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்  குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்... - amazing benefits of amla juice for skin  and healthy | Samayam Tamil

ஆஸ்துமா (Asthma) ஏற்படுவதற்கான காரணங்கள்வது எவை?

பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு

(Asthma) முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது.

ஒவ்வாமையும் பரம்பரைத்தன்மையும் தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள்.

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை நிலைகொள்ள வைப்பவை .

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.

டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.

இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும்.

நாம் சாப்பிடும் சில மருந்துகளால் கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.

ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருக்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன.

அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது.

இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான்.

அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

தவிர்ப்பது எப்படி?

ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் படங்களைத் தொங்கவிடக் கூடாது. இவற்றில் ஒட்டடை சேரும் வாய்ப்பு அதிகம். ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருக்கும். அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது.

சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால் கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.

பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி. ஆகவே பூக்கள் பூக்கின்ற இளங்காலை நேரத்தில் தோட்டம் பக்கம் போகக் கூடாது.

இதுபோல் வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை.

பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது. வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்து மாவைத் தூண்டுகிற காரணி.

உணவில் கவனம் தேவை!

ஆஸ்துமாவை (Asthma) ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது.

பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள்.

வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேற வாய்ப்பு ஏற்படும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

மூச்சுப்பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் முறைப்படி பிராணாயாமம் செய்வது நல்லது. அல்லது காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊதி நிரப்பும் பயிற்சியைச் செய்யலாம்.

பெரிய ரப்பர் பலூனை ஊதிப் பயிற்சி செய்யலாம். சிறிய ஊதுகுழல் மூலம் தண்ணீரில் குமிழ்கள் வருமாறு ஊதிப் பயிற்சி செய்யலாம். இதன் மூலம் நுரையீரலின் திறனை அதிகப்படுத்த முடியும்.

ஆஸ்துமா என்பது குறைபாடு தான் நோயல்ல.

ஆஸ்துமா என்றால் என்ன? அது ஏன், எப்படி வருகிறது? இது எப்போது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?

பதில்: மூச்சுகுழாயில் சுருக்கம் அல்லது வீக்கம் ஏற்பட்டு அதனால் சீரான சுவாசம் தடைபடுவது ஆஸ்துமா நோய் எனப்படுகிறது.

பல்வேறு புறக்காரணிகளான  காற்று,மாசு, வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றாலும், அகக்காரணிகளான ஒவ்வாமை பரம்பரை ஜீன்கள் ஆகியவற்றாலும் இந்நோய் ஏற்படுகிறது.

இது சுமார்  2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மக்களால் கண்டறியப்பட்டு ஆஸ்துமா என்று பெயரிடப்பட்டது.. மேற்கத்திய நாடுகளில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

நமது நாட்டில் ஆஸ்துமாவிற்கான சூழல் அரிதானதாக இருந்தது. ஆனால் கடந்த 80 ஆண்டுகளில் நிலை மாறிவிட்டது.

ஆஸ்துமாவின் (Asthma) அறிகுறிகள்

மூச்சுத்தினறல் – திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்.
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும்.

பின்னர் தானாகவே மறைந்துவிடும் மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அ‌றிகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.

Leave a Reply

Your email address will not be published.