ஆஸ்துமா குணமாக உணவுமுறை(Foods That Cure Astma)
ஆஸ்துமா(Astma) உள்ளவர்கள் அரைவயிறு சாப்பாடு,கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமளிக்க வேண்டும்.
ஆஸ்துமா (Astma) உள்ளவர்கள் முழு வயிறு சாப்பிட்டால் அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். ஏனெனில் இவர்களுக்கு நுரையீரலில் பிராணவாயு ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் உணவு ஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சு திணறல் ஏற்படும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால்,நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாக எல்லா நோய்க்கும் உணவே மருந்து. அதனால் தான் எமது பாரம்பரிய உணவு முறையில் மருத்துவ குணம் நிறைந்த காய்கனிகள்,தானியங்களை உணவாக உண்டு வந்தனர். ஆஸ்துமா சிகிச்சையில் உணவை மருந்தாக எடுத்து வர அதிக பலனைக் காணலாம்.
காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது.
உலர்ந்த பழங்கள்
- மிகவும் குளிர்ந்த உணவுகளையும் சாப்பிட கூடாது. உடன் சமைத்த சூடான உணவை சாப்பிடுவது சிறந்தது.
- இரவு சாப்பாடு ஆறு – ஏழு மணிக்குள் சாப்பிடவும். அதுவும் சூரியன் மறையுமுன் சாப்பிட்டால் மிகவும் நல்லது. பொதுவாக சூரிய வெளிச்சம் இருக்கும் பொழுது உண்ணும் உணவு சூரிய கதிர்களால் விரைவில் ஜீரணமாகும். ஆரோக்கியமாக வாழ நாம் இரவு சாப்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
- இரவில் கீரை ,தயிர், பால், குளிர்ந்த பானங்கள் தவிர்க்கவும்.
- மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ளவும். மன இறுக்கம், கோபம் கூடாது. பூண்டு சேர்த்து அரிசி கஞ்சி சாப்பிடவும்.
பால் குடிப்பதாயின் மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.
இரவு நேரத்தில் மூச்சிரைப்பு (Wheezing) நீங்க
கற்பூரவள்ளி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை போட்டுக் கஷாயமாக வைத்து தேன் சேர்த்து அருந்தவும்.
நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்து வந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும்.
கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம்.
ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது.
மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.
மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம்.
சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.
மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருமளவு குறைக்கும்.இரவு உணவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். பரோட்டா, பிரியாணி,சப்பாத்தி போன்றவை கூடாது.
தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும்.
பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.
இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் மெல்வது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது.
ஆஸ்துமா உள்ளவர்கள் அவசியம் உண்ண வேண்டியவை (Astma patient need to eat)
சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்..!
குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை தடுப்பதன் மூலம் ஆஸ்துமாவின் வீரியத்தை குறைக்கலாம். ஆஸ்துமா உள்ளவர்கள் ஒரு சில உணவுகளை கட்டாயம் தவிர்த்தல் அவசியமாக உள்ளது.
ஒருசில உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுது ஆஸ்துமாவின் அறிகுறியானது அதன் பாதிப்பானது இன்னும் பல மடங்கு அதிகமாகிறது.
ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்(Foods To Avoid For Asthma)
அனைவருக்கும் அனைத்து பொருட்களும் அனைத்து உணவுப் பொருட்களும் உகந்ததாக இல்லை சிலருக்கு சில உணவுப் பொருள்கள் ஆத்மாவை மேலும் அதிகப்படுத்துவதாக அமைகிறது.
பொதுவாக ஒருசில உணவுப் பொருட்களை ஆஸ்துமாவுக்கு உகந்தது அல்ல என்று அறிவித்து உள்ளார்கள். அது என்னென்ன உணவுகள்?
உறைய வைக்கப்பட்ட உணவு பொருட்கள்
ஒரே வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட மீன்,காய் வகைகள், இது போன்ற பொருட்களிலும் சல்பைடு அதிகமாக இருக்கும் நாள்பட்ட கடல் உணவுகளில் அதிகமாக உருவாகிவிடும்.
இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்.
ஆஸ்துமா உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் வீரியம் அதிகமாக மூச்சு திணறல் தும்மல் ,இருமல் , கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக காணப்படும்.
மீன் வகைகளை முடிந்த அளவு புதிதாக உள்ள மீன் வகைகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.
ஊறுகாய்
ஊறுகாய் ,சாஸ் போன்ற ரெடிமேடாக கிடைக்கக்கூடிய உணவு பொருட்களில் அதிகமாக சல்பேட் சேர்க்கப்பட்டிருக்கும்.
சல்பேட் (Sulfate)என்பது பலப்படுத்துவதற்காக சேர்க்கக்கூடிய ஒரு பொருளாகும்.இது சாதாரண மக்களுக்கு எந்தவித தீங்கும் பெரும்பாலும் செய்வதில்லை.
ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
பாக்கெட் உணவுகள்
கடைகளில் கிடைக்கக்கூடிய பாக்கெட் உணவுகள் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகப் பெரும் தீங்கை விளைவிக்கும்.
இதிலும் அதில் சேர்க்கக்கூடிய சிலஇராசயனங்கள் ஆனது முக்கியமாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
இரசாயனம் பூசப்பட்ட செர்ரி போன்ற பழங்கள்
இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மரத்திலிருந்து நேரடியாக பத்து செர்ரிப் பழங்களைச் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் பதப்படுத்தப்பட்ட செர்ரி பழத்தில் சிவப்பாகவும் பளபளப்பாகவும் தெரியவேண்டும் என்பதற்காக அதில் ஒரு சாயம் பூசி இருப்பார்கள்.
அந்த சமயத்தில் மிகவும் அதிக அளவு சல்பேட் கலந்து இருக்கும் இதுபோன்ற செர்ரி பழத்தை சாப்பிடுவதால் அதில் உள்ள ஜூசை குடிப்பதினால் ஆஸ்துமா நோய்க்கு பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஆஸ்துமா தூண்டப்படும் எனவே ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதுபோன்ற பதப்படுத்த செர்ரி பழத்தை சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
பீர் மற்றும் ஒயின் குடிக்கும் பொழுது இருமல், இளைப்பு ஏற்படுவது போல இருந்தால் மீண்டும் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து விடவேண்டும்.
பலவகையான உயிர் நுண்ணுயிரிகள் மற்றும் சல்பைட் அதிக அளவில் சேர்த்திருப்பார்கள்.
தொடர்ந்து இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணீர் வடிதல், தும்மல், இளைப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.
ஆஸ்துமாவும் உலர்ந்த பழங்களும் (Astma & Dry fruits)
ஆஸ்துமா (Astma) நோய் உள்ளவர்கள் உலர்ந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது ஆஸ்துமாவின் வீரியம் இன்னும் அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
ஏனெனில், உலர்ந்த பழங்களில் உள்ள ஒருவித பதப்படுத்தப்படும் அதற்கான சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது.
இது தவிர உங்களுக்கு அலர்ஜி தரக்கூடிய எந்த ஒரு உணவையும் நிச்சயமாக நீங்கள் தவிர்ப்பது மிகவும் நன்மை விளைவிக்கும். சில உணவுப் பொருட்கள் நமக்கு ஒத்து வரவில்லை என்றால் அதை தவிர்த்துவிடுவது நல்லதே.
முடிந்தவரை செயற்கையான உணவு பொருட்களை தவிர்த்து வந்தாலே ஆரோக்கியம் பெருகும்!
இயற்கையான உணவுகளையே சாப்பிட்டு வருவது எண்ணத நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ வைக்கும்!