பலவிதமாக அதிரசம் சுவைப்போம் (Athirasam recipes)
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல விதமாக அதிரசம் செய்வது (Athirasam recipes) எப்படி என்று பார்ப்போம்.அதிரசம் சுவைக்கு சுவையோடு, இலகுவான செய்முறை. அதோடு செய்ய தேவையானபொருட்களும் மிகக் குறைவே.
தீபாவளி என்றாலே பலவிதமான சுவையான இனிப்பு பலகாரங்கள் தான் நினைவில் வரும். லட்டுவகை , பூந்தி, தொதல், இனிப்பு சீடை,தித்திக்கும் ஜிலேபி ,இனிப்பு முறுக்கு, நாவில் கரையும் மைசூர் பாகு , என பட்டியல் நீண்டு கொண்டே யோருக்கும். இவற்றோடு தீபாவளிக்கு கட்டாயமாக அதிரசமும் இருக்கும்.
செட்டிநாடு அதிரசம்
செட்டிநாடு அதிரசம் என்பது ஒரு பாரம்பரிய தின்பண்டம். இதற்கென்று ஒரு வித தனி ருசி இருக்கும். அதை செட்டிநாடு அதிரசத்தை செய்வதை ஒரு கலையாக கொண்டவர்களுக்கு மட்டும் தான் அதை பதமாக மற்றும் பக்குவமாக செய்ய முடியும்.
சாதரணமாக செட்டிநாடு அதிரசத்தை தினை அரிசியில் (Athirasam recipes) தான் செட்டிநாடு அதிரசத்தை செய்வார்கள் . அதன் தனிப்பட்ட விசேட சுவைக்கு காரணம் இதுவே. சிறுதானியமான தினையில் சுவை மற்றும் உடலுக்கு சக்தி தர கூடிய ஒரு சில விற்றமின்கள் இயற்கையாகவே இருக்கின்றன. அதனால் தினை அரிசியில் அதிரசம் செய்யும் போது நல்ல சுவை கிடைப்பதோடு சத்தும் கிடைக்கும்.
தற்போது அரிசி மாவைப் பயன்படுத்தி அதிரசம் செய்வது தான் சாதாரணாமாக இருக்கிறது. அரிசியில் செய்தாலும் தினையை பயன்படுத்தி செய்தாலும் செய்யும் முறை ஒன்றே.

செட்டிநாடுமுறையில் அதிரசம் தேவையான பொருட்கள்
தினை அரிசி – அரை கிலோ
வெல்லம் – 300 கிராம்
ஏலக்காய் சிறிதளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
செட்டிநாடு அதிரசம் செய்முறை(Athirasam recipes)
- தினையரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும்.
- அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
- பின்னர் தினை மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.
- ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது.
- தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்து சுவைக்கலாம். பொரித்து வைத்தாலும் ஒரு மாதம் வரை கெடாது.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார்.
இலங்கை முறையில் அதிரசம் செய்முறை (Athirasam recipes)
யாழ்ப்பாணத்தில் இப்பலகாரத்தை அரியதரம் என்று சொல்வார்கள். தேவையான பொருட்கள் ஒன்றே. ஆனால் செய்யும் முறையில் சற்று வேறுபாடு இருக்கும்.
அரியதரம் செய்யும்முறையை வீடியோவில் பார்ப்போம்.
பச்சை அரிசி அதிரசம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கிலோ
வெல்லம் – 3/4 கிலோ
ஏலக்காய் – 6
எண்ணெய் – பொரிப்பதற்கு
பச்சை அரிசியில் அதிரசம் செய்முறை
- ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து களைந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு ஒரு காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை போட்டு பரப்பி விட்டு நிழலில் உலரவிடவும்.
- அரிசி நன்கு காய்ந்து விடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும் போதே எடுத்து விடவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக அரிசியை போட்டு அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூள் செய்து போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
- ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் பாகின் சுவை நன்றாக இருக்கும். பாகின் பதம் தெரிந்துக் கொள்ள ஒரு தட்டில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது பாகை எடுத்து ஊற்றினால் கரையாமல் இருக்க வேண்டும்.
- கையில் எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் விரலில் ஒட்டாமல் முத்து போல் வரவேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவைக் கொட்டி அதில் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.

- அதில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். ஒரே முறையில் அனைத்து பாகையும் கொட்டிவிடாமல் சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு கைவிடாமல் கிளறவும். மாவும் வெல்லமும் ஒன்றாக சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பிறகு அதனை அப்படியே பாத்திரத்தில் வைத்து சுமார் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். மாவு அப்போது தான் புளித்து பதமாய் வரும்.
- இரண்டு நாட்களுக்கு பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- ஒரு ப்ளாஸ்டிக் கவரின் மீது சிறிது எண்ணெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வைத்து, கைகளால் வட்ட வடிவில் தட்டையாக தட்டவும்.
- அதனை எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். தீயை அதிகம் வைக்காமல் மிதமான தீயில் வேக விடவும்.
- சற்று பொன்னிறமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைத்து, இரண்டு புறமும் சற்று சிவந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

கடைகளில் விற்கப்படும் அதிரசத்தை வாங்குவதைத் தவிர்த்து, சுவையாக சத்தான அதிரசத்தை நம் கையாலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுப்போம். உடல் ஆரோக்கியம் காப்போம்!
சந்தோசமாக குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்.!!