ஆவாரம்பூவை உணவில் சேர்ப்போம் (Avarampoo recipe)
உடல் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்,உடல் வலிமையை தரும், ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் அதி அற்புதம் வாய்ந்த ஆவாரம்பூவை உணவில் (Avarampoo recipe) பயன்படுத்திக் கொள்வோம்.
ஆவாரம்பூவை எப்படி உணவில் சேர்ப்பது என தெரியாமல் இருப்பவர்களுக்கான சில ஆவாரம்பூ சமையல் (Avarampoo recipe) குறிப்புகள். ஆவாரம்பூ பைப் பயன்படுத்தி குழம்பு,சாம்பார்,கூட்டு,தேநீர்,கசாயம் என பலவிதமாக சமைத்து உண்டு பயன் பெறலாம்.
நீரிழிவுநோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு என இப்படி எல்லாவற்றிற்கும் ஆவாரம் பூ (கஷாயம்) தேநீர் ஒரு சூப்பர் மருந்து.
பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என்ற பழமொழியில் இருந்து ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம்.
பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரை தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் மிகக் கடுமையான வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது.
ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து “ஆவாரைப் பஞ்சாங்கம்” என்று அழைக்கப்படுகிறது.
ஆவாரையின் மருத்துவ குணங்கள்(Medicinal value of Avarampoo)
ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு வெண்ணீர் பருகிவர சர்க்கரைநோய், உடல் சோர்வு, நாவறட்சி, தூக்கம் இன்மை ஆகியவை நீங்கும். தடைப்பட்ட இன்சுலின் சுரப்பு மீண்டும் ஆரம்பிக்கும்.
ஆவாரையின் பூவையும் இலையையும் சம அளவு அடுத்தட பிழிந்து சாறாக்கி வேளைக்கு 1 அவுன்சு வீதம் இருமுறை நாளும் குடித்து வர சிறு வயதில் ஏற்படும் சர்க்கரைநோய் விலகும்.
ஆவாரம் பூ, இலையின் கொழுந்தை சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவர நீரிழிவு நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும்.
சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும். ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் துர்நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறை சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் ,துர்நாற்றம் நீங்கும்.
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம்பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.
ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.
ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து, நீர் விட்டு அரைத்துக் குழப்பிப் படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட உடல் சூட்டினால் ஏற்படும் கண்களின் சிவப்பு மாறும்.
பாசிப்பருப்புடன் ஆவாரம் பூக்களைசேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.
வாய்ப்புண் இருக்குறவர்கள் ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
ஆவாரம் பூ சாப்பிட மனித உடல் பொன் நிறமாக மாற்றம் பெறும்.
ஆவாரம்பூவில் தேநீர் தயாரிக்கும் முறையை (Avarampoo recipe) பார்ப்போம்.
ஆவாரம்பூ குழம்பு எப்படி வைப்பது? (Avarampoo kuzampu recipe)
- ஆவாரம்பூ சேகரித்து அதன் இதழ் மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
- அதன் பின்னர் துவரம் பருப்பு தேவையான அளவு இரண்டு தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.
- தண்ணீர் கொதித்து துவரம் பருப்பு வேகும் போது கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- அதன்பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சேர்த்து தாளித்து வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள்,ஆவாரம்பூவையும் சேர்த்து வதக்கவும்.
- வேகவைத்த துவரம் பருப்பை கடைந்து அதனை வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கவும்.
- தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும் இறக்கவும்.
- இறக்கும் முன்பு கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். சுவையான ஆவாரம்பூ குழம்பு தயார்.
