அவகடாபழ குளிர்பானங்கள் (Avocado cool drinks)
இப்பழமானது அப்படியே சப்பிடலாம். பெரும்பாலும் தண்ணீரில் அலசப்பட்டு, நீளவாக்கில் கீறப்பட்டு கரண்டியைப் பயன்படுத்தி இழைத்து உண்ணப்படுகிறது.அல்லது சாலட்டாகவோ, பழக்கலவையாகவோ(Avocado cool drinks) உண்ணப்படுகிறது.
மேலும் இப்பழம் ஐஸ்கிரீம், பழச்சாறு, பழக்கூழ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
அவகடாபழத்தை பயன்படுத்தி சுவையான குளிர்பானங்கள் (Avocado cool drinks) தயாரிக்கும் முறைகளை வீடியோவில் பார்காலம்.

மேலும் ,முக அழகு, சரும அழகைப் பேண அவகாடோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவகாடோ பழம் மட்டுமன்றி, அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் (Acocado oil) சரும அழகை பேணுவதற்கும், ஆரோக்கியமான தலைமுடிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அவகோடா ஸ்மூத்தி செய்ய தேவையான பொருட்கள்
300 மி.லீ பால்
1/2 அவகோடா
1 மே.க தேன் / சீனி
செய்முறை
அவகோடா ஸ்மூத்தி தயாரிப்பதற்கு அனைத்துப் பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு கூழாக அரைக்கவும் . அரைத்த அவகோடா ஸ்மூத்தியை பரிமாறும் கப்பில் விட்டு , விரும்பினால் அவகோடாவால் அலங்கரித்து பரிமாறவும். . சுவையான அவகோடா ஸ்மூத்தி தயார்.
வெயிலால் கலைத்து வரும் பொது குடிக்க மிக இதமாக இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் வெண்ணைப் பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமோடு வாழ்வோம்.