சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் மற்றும் ப்லேவனைடு போன்றவை பல் வேறு தீங்கு விளைவுக்கும் கூறுகளை வெளியேற்ற உதவுகிறது. 
 
பூண்டு மற்றும் அவகாடோவுடன் சேர்ந்த இந்த சிவப்பு வெங்காயம், குடல் புழுக்களைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது.
 
தேவையான பொருட்கள்
 
1 –  சிவப்பு வெங்காயம்
 
1 – அவகாடோ
 
3 – பூண்டு பற்கள்
 
நட்ஸ் – சுவைக்கேற்ப
 
10 – பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகள்
 
செய்முறை
 • வெங்காயத்தைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
 • அவகாடோவை பிரித்து, உங்கள் விருப்பத்திற்கேற்ற படி வெட்டிக் கொள்ளவும். 
 • 2 அல்லது 3 பூண்டு பற்களை நசுக்கிக் கொள்ளவும். பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகளை டோஸ்ட் செய்து கொள்ளவும். 
 • எல்லா மூலப்பொருட் களையும் சேர்த்து கலந்து தேவைப ட்டால் சிறிது நட்ஸ் சேர்த்துக் கொள்ளவும். 
 • இப்போது அவகாடோ சாலட் (Avocado salad)  தயார்.

அவகாடோ ஆப்பிள் ஆரஞ்சு சாலட்

தேவையான பொருட்கள்

 1. அவகாடோ பழம்-1
 2. கமலா ஆரஞ்சு -1
 3. கோல்டன் ஆப்பிள் -1
 4. தேன் – 2 தேக்கரண்டி
 5. உப்பு,மிளகு – சிறிது.

செய்முறை

 • அவகாடோ பழத்தை பாதியாக நீள் வாக்கில் நறுக்கி எடுத்து நடுவில் உள்ள கொட்டையை எடுக்கவும்.
 • அடுத்து ஸ்பூன் கொண்டு பழத்தை சிதைக்காமல் எடுக்கவும்.நீள் வாக்கில் நறுக்கவும்.
 • கமலா ஆரஞ்சு உரித்து வைக்கவும்.விதை இருக்கக்கூடாது,அது போல் ஆப்பிளையும் மெல்லிய ஸ்லைசாக நறுக்கி வைக்கவும்.
 • ஒரு பவுலில் தேன்,உப்பு,மிளகு சேர்த்து நறுக்கிய மூன்று பழங்களும் சேர்த்து கலந்தால் சாலட் தயார். தட்டில் பரிமாறவும்.
 • சத்தான சுவையான சாலட் (Avocado salad).டயட் சாலட், நன்கு பசி தாங்கும்.

 சிவப்பு முள்ளங்கி அவகோடா சாலட்

சிவப்பு முள்ளங்கி  – 1
அவகடோ-  1
கரட்- 1/2
பாதாம்  – ஒரு கையளவு
பூண்டு- 5 பற்கள்
பட்டர் அல்லது ஒலிவ் எண்ணெய் – 1 தே.க
உப்பு, மிளகு தூள் – சுவைக்கேற்ப

செய்முறை

காய்கறிகளை நன்றாகக் கழுவி கொள்ளவும்.
சிவப்பு முள்ளங்கியை மிக மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பூண்டை உரித்து மிக மிக சிரியதாக வெட்டவும்.
கரட்டையும் பாதாம்  பருப்பையும் மெல்லிய நீலத் துண்டுகளாக வெட்டவும்.
அவகாடோவை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
அடுப்பில் பத்திரத்தை வைத்து பட்டரை உருக்கவும்.
அதில் பூண்டுத் துண்டுகளை போட்டு  வாசனி வரும் வரை வதக்கவும்.அதில் சிவப்பு முள்ளங்கி துண்டுகளைப் போட்டு ௧ நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும்.
இப்போது அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

முள்ளங்கியின் சதை ஒரு காரமான மற்றும் மிளகு சுவையுடன் மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளது. முள்ளங்கிகள் குளுக்கோசினோலேட், மைரோசினேஸ் மற்றும் ஐசோதியோசைனேட் போன்ற தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு சேர்மங்களுக்கு அவற்றின் கூர்மையான சுவையைக் கொடுக்க வேண்டியுள்ளது. வெண்ணெய் பழம் இனிப்பானது அல்ல. ஆனால் அது தனித்தனியாகவும் நுட்பமான சுவையுடனும் மென்மையான அமைப்பையும் கொண்டுள்ளது.

இது அதிக கலோரி எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, ஆனால் அதிக ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் சமப்படுத்தப்படுகிறது.எனவே மிதமாக உட்கொள்ளலாம்.

வேர்க்கடலை அவகடோ சாலட் (Avocado salad)

தேவையான பொருட்கள்

வேக வைத்த வேர்க்கடலை – 200 கிராம்

சீரகம் – 1 டீஸ்பூன் அவகடோ பழம் – 1

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 50 கிராம்

பெங்களூர் தக்காளி -1

துருவிய கேரட் – 50 கிராம்

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்.

செய்முறை   (Avocado salad)

ஒரு அகலமான பாத்திரத்தில், வேர்க்கடலை, சிறு துண்டுகளாக நறுக்கிய அவகடோ பழம், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளி, துருவிய கேரட், சீரகம், நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சை சாற்றைச் சேர்த்து ஒன்றாகப் பிரட்டவும்.
சுவையான சாலட் தயார். குறிப்பு: அவகடோ பழத்தின் தோல் பிரவுன் நிறத்தில் இருந்தால் தான் பழம் பழுத்தது என்று அர்த்தம். சின்ன வெங்காயத்தை வதக்கியும் சாலட்டில் சேர்க்கலாம்.