சிங்கப்பூரின் அடையாளமான கோடாலி தைலம் (Axe Oil)

வானுயர்ந்த கட்டிடங்கள், நல்லாட்சி, சுத்தம்,உயர்தர வாழ்க்கைத்தரம்  என சிங்கப்பூருக்கு எவ்வளவோ என சிறப்புக்கள் இருந்தாலும், கோடாலி தைலத்திற்கென (Axe Oil) தனி இடம் உண்டு.

இன்று, ஆசிய கண்டத்தில் முன்னணி தைல நிறுவனங்களில் கோடாரி தைலமும் (Axe Oil) ஒன்று என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், சிங்கப்பூரில் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற முன்னணி நிறுவனங்களில் Axe நிறுவனமும் ஒன்று ஆகும்.

முந்தின தலைமுறையில் பலர் நம்மூரிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்று ஒவ்வொருமுறையும் ஊர் திரும்பும்போது, பையில் கண்டிப்பாக கோடாலி தைலம் (Axe Oil)இருக்கும்.

இன்று ஆசிய கண்டத்தில் மிக முக்கிய பிராண்ட் மட்டுமல்ல, சிங்கப்பூரின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற முன்னணி பிராண்டாகவும் திகழ்கிறது.

90 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த இந்த தைலம் மருத்துவ உலகில் முடிசூடா மன்னனாக இருந்து வருகிறது. ஒரு சிறிய தலைவலி என்றால் கூட உடனே நம் நினைவிற்கு வருவது கோடாரி தைலம் மட்டும் தான்.

கோடாரி தைலம்  உருவாகிய வரலாறு(History of the axe oil)

1928ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த கோடாரி தைலத்தின் நிறுவனர் லியூங் யுன்(Leung Yun Chee ) எனும் சீனர், ஷ்மிட்லர்(Dr.Schmeidler ) எனும் ஜெர்மானிய மருத்துவர் அளித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு கோடாலி தைலத்தை தயாரித்தார்.

அந்த குறிப்புகள் Axe Oil நிறுவனம் தொடங்க வித்தாக அமைந்தது.

1930 ஆம் ஆண்டுகளில் இந்த தைலத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையான வியாபார போட்டி சந்தைகளில் இருந்து வந்தது.

கோடாரி தைலம்  உருவாகிய வரலாறு,History of the axe oil,annaimadi.com,சிங்கப்பூரின் அடையாளமான கோடாலி தைலம்,Axe Oil.Axe balm,Axe Ointment,அன்னைமடி,கோடாரி தைலத்தின் பயன்கள்,Use of axe oil

தலைவலி, உடல்வலிக்கான நிவாரணமாக சீன தயாரிப்புகள் கடும் போட்டியை அளித்ததால், நிறுவனத்தின் சின்னத்தை (Logo) வித்தியாசமாக வடிவமைத்தார்.

அப்போது தன்னுடைய தைலத்தின் சின்னத்தை (Logo) புதுமைபடுத்த எண்ணினார்.அதனை  கோடாரி  சின்னமாக மாற்றினார்.

மாற்றப்பட்ட அந்த சின்னம் (Logo) ஒரு அடையாளமாக மாறி இன்று வரை அதன் விற்பனைக்கு முன்னோடியாக இருந்து வருகிறது.

அதன் பிறகு துண்டு சீட்டின் மூலம் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் வீடு வீடாக விநியோகம் செய்தார். துண்டு பிரசுரங்கள் தான் கோடாலி தைலத்தின் பிரதான வியாபார  உத்தி(Marketing tricks).

கடல்வழிப் பயணமாக சவுதிக்கு ஹஜ் யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்படும் கடல்நோய்களான‌ (Sea Sick) தலைவலி, தலைசுற்றல், வாந்தி போன்றவற்றுக்கு கோடாலி தைலம் சிறந்த நிவாரணியாக இருந்தது.

இதனால் சவுதியில் பெரிய வியாபார வாய்ப்பை பெற்றது கோடாலி தைலம்.

1971 ஆண்டு நிறுவனர் இறந்தபின் அவருடைய மூத்தமகன் பொறுப்பேற்றார். இன்று ஆசியாவில் சிறந்த தைலமாகவும். சிங்கப்பூரின் Heritage Brand in Singapore ஆகவும் இருந்து வருகிறது.

கோடாரி தைலத்தின்  பயன்பாடு(Use of axe oil)

மூட்டுவலி, உடல்வலி என பல்வேறு உபாதைகளால் அவதியுறும் வயதானவர்களுக்கு கோடாலி தைலம் அருமருந்தாகும்.

வலி உள்ள இடங்களில் கோடாலி தைலத்தின் (Axe Oil) சில துளிகளை இட்டு நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கோடாரி தைலம்  உருவாகிய வரலாறு,History of the axe oil,annaimadi.com,சிங்கப்பூரின் அடையாளமான கோடாலி தைலம்,Axe Oil.Axe balm,Axe Ointment,அன்னைமடி,கோடாரி தைலத்தின் பயன்கள்,Use of axe oilமூக்கடைப்பு ஏற்பட்டுள்ள நேரங்களில், சில துளிகளை கைக்குட்டையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும்.

வாய்வு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வயிற்றின்மேல் தைலத்தை நன்றாக தேய்த்து, சுத்தமான துணியை சூடான நீரில் நனைத்து தைலம் தேய்த்த பகுதிகளை மூடிவைத்தால், வயிறு அசௌகரியங்கள் நீங்கும்.

இந்த கோடாரி தைலம் பொதுவாக தலைவலி, மயக்கம், பூச்சிக்கடி, வயிற்று வலி, ஜலதோசம், வாத சம்பந்தமான வலிகள் மற்றும் தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இந்த தைலம் நிவாரணியாக பயன்படுகிறது.

 பயன்படுத்தும் முறை

  • வலி உள்ள இடத்தில் இந்த தைலத்தை சில துளிகள் இட்டு நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம்.
  • கைகுட்டைகளில் இந்த தைலத்தை சில துளிகள் இட்டு மூக்கடைப்பு நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • வாய்வு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு தொப்புள் பகுதியில் தைலத்தை தேய்த்து பிறகு துண்டை சூடான தண்ணீரில் நனைத்து தொப்புள் பகுதியை மூடி வைக்க வேண்டும்.

இன்னும் பல நூறு  ஆண்டுகள் சென்றாலும் இந்த தைலத்தின் மதிப்பும், பயன்பாடும் அதிகரித்து கொண்டே தான் செல்லும்.அவ்வளவு மருத்துவ பெறுமதியானது!

Leave a Reply

Your email address will not be published.