முதுகு எலும்பு தேய்மானம் (Spinal column depreciation)
முதுகுவலி (Back pain) படுத்துகிறதா?
தற்போது குறிப்பாக 40 வயதைக் கடந்த பலர் முதுகுவலியால் (Back pain) அவதிப்படுவர்கள் அதிகமாகி விட்டார்கள். அதாவது பலருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை.இதனால் இவர்களால் பாரங்களை தூக்க முடியாது,சைக்கிள் ஓட முடியாது ,குனிய முடியாது, ஓட முடியாது,நேராக நிமிர்ந்து நிற்க முடியாது, ஏன் விரைவாக நடக்க முடியாது…. என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இந்த முதுகுவலி (Back pain) வரும் போது ஓய்வாக உட்கார்ந்திருந்தாலும், வேலை செய்துகொண்டு இருந்தாலும் கூட வலியின் தீவிரம் இருந்துகொண்டே இருக்கும்.
ஏனெனில் முதுகு எலும்பு தான் எல்லா எலும்பு,நாடி நரம்புகளுக்கும் ஆதாரம்.மற்ற எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் போலல்லாமல், இதுதொடர்ச்சியான கீழ்நோக்கிய அழுத்தத்தின் கீழ் உள்ளது. இதனால் ,
ஒருவர் நிற்கும் போதோ நிமிர்ந்து உட்காரும் போதோ முதுகெலும்பு தொடர்ந்து சுருக்கப்படுகின்றது.
முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.முதுகெலும்பு ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இல்லாவிட்டால், வாழ்க்கையே நரகமாகிவிடும்.
ஆம், முதுகெலும்பு வலிமையிழந்து போனால், முதுகு வலி (Back pain) , முதுகு தண்டுவட பிரச்சனைகள் போன்றவற்றை சந்தித்து, நாளடைவில் நடக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.
எனவே ஆரம்பத்திலேயே முதுகெலும்பின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.
உணவும் இந்த எலும்புத் தேய்மானத்தில் முக்கிய தாக்கம் ஏற்படுத்துகின்றது.இங்கே உள்ள வீடியோவில் ,உணவின் மூலம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்படாமல் இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்,எப்படி முதுகு எலும்பை பலப்படுத்துவது பற்றி பார்க்கலாம்.
முதுகெலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
முக்கியமாக முதுகெலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் வழி ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது தான். முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் எவையென்று காண்போமா!
தாவர வகை புரோட்டீன்கள்
முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட தாவர வகை புரோட்டீன்கள் நல்லது. இந்த வகை புரோட்டீன்களானது இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை விட மாறுபட்டவைகளாகும்.இறைச்சிகளில் இருந்து பெறப்படும் புரோட்டீன்கள் உடலினுள் அழற்சி/உட்காயங்களை உண்டாக்கும். எனவே முடிந்த வரை தாவர வகை புரோட்டீன்களை அதிகம் எடுக்க முயற்சி செய்யுங்கள்.
எனவே கசகசா , பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். இவற்றில் இருந்து புரோட்டீன் சத்து மட்டுமின்றி, இதர அத்தியாவசிய சத்துக்களான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவையும் உடலுக்கு கிடைக்கும். ஒருவேளை இறைச்சி வகை புரோட்டீனை எடுக்க நினைத்தால், தோல் நீக்கப்பட்ட இறைச்சியைத் தேர்ந்தெடுங்கள். அதுவும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்கு பதிலாக சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
பொதுவாகவே காய்கறிகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள பண்புகள்,முதுகெலும்பு பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும். கேல் கீரை, ப்ராக்கோலி மற்றும் பசலைக்கீரை போன்றவை அழற்சியை எதிர்த்துப் போராடும்.
இந்த ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள், தண்டுவடத்தை வலிமைப்படுத்த உதவுபவை. எனவே காய்கறிகளை உங்கள் உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
வேகவைத்த காய்கறிகள் மற்றும் அவித்த வருப்பு வகை ,மோர். உப்பு.சர்க்கரை,எண்ணெய்,நெய்,வெண்ணெய் போன்றவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடவே இவற்றையும் செய்து கொள்ளுங்கள்
- எடை தாங்கும் உடற்பயிற்சி
- கல்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவு /பால் மீன் மற்றும் நட்ஸ் போன்றவை
- சிறந்த எடையை (BMI) பராமரித்தல்
- வழக்கமான பிசியோதெரபி
- எல்லாவிதமான விட்டமின் (Multi vitamin)
- சரியான தூக்கம்