பத்த கோணாசனம் (Baddha Konasana)

பத்த கோணாசனம் (Baddha Konasana) என்பது கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள்.இதனை பெண்களுக்கான சிறப்பான ஆசனம் என்று சொல்லலாம்.

பத்த கோணாசனம் (Baddha Konasana) செய்வதனால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது. கருவுற்றபெண்களுக்கு மிக சிறந்த ஆசனம்.

விரல் நுனியில் உலகம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது கணிசமாக குறைந்துவிட்டது.

இந்த வாழ்க்கை முறையால் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை.இதனை போக்க யோகாசனங்கள்,உடற்பயிற்சிகள் செய்வதே சிறந்த வழி.

பத்த கோணாசனம் செய்யும் முறை (Baddha Konasana)

  • முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை கீழே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள்.
  • இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள்.
  • இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.
  • அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பத்த கோணாசனம் ,Baddha Konasana for Easy childbirth,annaimadi.com,butterfly pose,அன்னைமடி,பத்த கோணாசனம் செய்யும் முறை,  பத்த கோணாசனத்தின் பலன்கள்,கர்ப்பிநிகளுக்கான ஆசனம் ,yoga for normal delivery,Yoga for pragnents

5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்ட பின் 2 மணி நேரம் சென்ற பின் இந்த ஆசன பயிற்சியை 2 முதல் 4 முறை செய்யலாம்.

பெண்களுக்கு மிக பயனுள்ள ஆசனம்

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது.

முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளே ஒவ்வொரு ஆசனங்களை குறித்தது.காலமாற்றத்தினால் இப்பொழுது பல கர்ப்பிணிகளுக்கு வீட்டு வேலைகள் மிகவும் எளிதாக அமைவதால், உடலுக்கு தேவையான பயிற்சிகள் கிடைக்க செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது.

நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய உதவி புரிகின்றது.அத்துடன் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க செய்யவும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கவும் செய்கின்றது.

மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும்.

அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும்.

இந்த யோகப் பயிற்சியை செய்வதால், இடுப்பு எலும்பு நன்கு விரிவடைந்து உடல் பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து இந்த யோகப் பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும். 

பத்த கோணாசனம் (Baddha Konasana) மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

பத்த கோணாசனத்தின் பலன்கள்(Benefits of doing Baddha konasana)

முடிஉதிர்வு, முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.பத்த கோணாசனம் ,Baddha Konasana for Easy childbirth,annaimadi.com,butterfly pose,அன்னைமடி,பத்த கோணாசனம் செய்யும் முறை,  பத்த கோணாசனத்தின் பலன்கள்,கர்ப்பிநிகளுக்கான ஆசனம் ,yoga for normal delivery,Yoga for pragnents

விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும்.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும்.

தொடைகளின் சந்துப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும் போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் இருக்கும். அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி சில தடவை  காலை, மாலை செய்ய சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published.