வழுக்கை ஏற்படாமல் தடுக்க முடியுமா?(To prevent Baldness)

வழுக்கை தலை பிரச்சனையால் ஆண்களேபிரதானமாக பாதிக்கப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட வயதில் தான் வழுக்கை (Baldness) ஏற்படும் என்ற காலம் போய், இப்போது பதின்ம வயதிலிருந்தே ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கினை தலைமுடி வகிக்கிறது.முடி முற்றாக விழுந்து இள வயதில் வழுக்கையாக காரணம் என்ன? 

தற்போது  வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கம் மற்றும் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், முடியைப் பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நிறைந்த அழகுசாதனப் பொருட்களின் பல்வேறு பக்க விளைவுகளே இவை.

முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது.

தலைமுடி ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்பது மிக அவசியம். 

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான்.

இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும். இதன் மூலம் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.வழுக்கை விழுவதைத் தடுக்க,To prevent Baldness,annaimadi.com,Baldness,​வழுக்கை வருவதற்கு முன்  What can be done before baldness comes?,​வழுக்கை தோன்றிய உடனே,வழுக்கையும் பராமரிப்பும் (Baldness and maintenance),அன்னைமடி முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது. புதிய முடியின் வளர்ச்சியும் அவசியம். பாலில் உள்ள  ஒரு வகையான அமினோ அமிலம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பது முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனலாம்.

இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.

ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

போதிய தூக்கம்  இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும்.அன்றாடம் 6-7 மணிநேரம் சீரான தூக்கம் அவசியம். 

வழுக்கை பாதிப்பும் பராமரிப்பும் (Baldness and maintenance)

வழுக்கை (Baldness) பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வரும். ஆனால் எச்சரிக்கையாக கவனித்து உரிய நேரத்தில் பெண்கள் விழித்துகொள்வதால் வழுக்கை பிரச்சனையிலிருந்து சுலபமாக தப்பித்துக்கொள்கிறார்கள்.

ஏனெனில்,பெண்கள் எப்போதும் அழகு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக கூந்தல் பராமரிப்பிற்கு தனியாக நேரம் ஒதுக்குவார்கள்.

வெகு சில பெண்களே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆண்களில் அதிக சதவீதத்தினருக்கு இந்த பிரச்சனை இளவயதிலேயே வந்துவிடுகிறது.

மரபு ரீதியாக வரும் வழுக்கை பிரச்சனைக்கு எந்த வித மான தீர்வும் இல்லை என்றாலும் முடி பராமரிப்பில் அக்கறையின்மை, மன அழுத்தம் (Stress) போன்றவை தான் அதிகப்படியான வழுக்கை பிரச்சனைக்கு காரணமாகிறது.

முன் நெற்றி  அல்லது பின் தலையில் வழுக்கை வருவது போல தோன்றினால்,முதலில் செய்ய வேண்டியது முடியை முறையாக பராமரிப்பது தான்.

இருக்கும் முடியும் கொத்து கொத்தாக சீப்போடு வரும் போது முடியின் வேர்க்கால்கள் அதன் வீரியம் அவற்றை மீண்டும் வளர செய்யமுடியுமா என்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண் டும்.

இதற்கு சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் சிகிச்சை நிபுணர்களை அணுகுவது நல்லது.

வழுக்கை விழுவதைத் தடுக்க,To prevent Baldness,annaimadi.com,Baldness,​வழுக்கை வருவதற்கு முன்  What can be done before baldness comes?,​வழுக்கை தோன்றிய உடனே,வழுக்கையும் பராமரிப்பும் (Baldness and maintenance),அன்னைமடி

வழுக்கை விழுவதைத் தடுக்க... (To prevent Baldness)

வழுக்கை ( Baldness) பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவது தான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி வளர சாத்தியம் இல்லை.

கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். வழுக்கை பிரச்சனையால் வாழ்க்கையே இழந்தவர்களும் உண்டு.

உறுதியான கூந்தலுக்கு விற்றமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக்கூடியவை.

முன் நெற்றி, மண்டையில் விழும் வழுக்கை வந்த பிறகு தீர்வு இல்லை. ஆனால் அறிகுறி கண்டு ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றினால் முடி உதிர்வை தடுக்கலாம். வழுக்கை ஏற்படுவதை தள்ளி போடலாம்.

தலைமுடி பிரச்சனையில் கூந்தல் உதிர்வு, பொடுகு, முடி  நுனி வெடிப்பு, கூந்தல் வறட்சி இவையெல்லாம் சரி செய்ய கூடிய பிரச்சனை தான்.
வழுக்கை வந்துவிட்டால் ஒருவரின் தோற்றமே மாறிவிடும்.வயதான தோற்றம் வந்துவிடும். இது சிலருக்கு வாழ்க்கையே போய்விட்டது போல் மன உளைச்சலைத் தரும்  விடயமாக இருக்கும்.
காரணம் வழுக்கை (Baldness) வந்து விட்டால் சரி செய்ய முடியாது. ஆனால் வழுக்கைக்கான அறிகுறி தென்படும்போதே அதை கண்டுவிட்டால் நீண்ட வருடங்களுக்கு தள்ளி போட செய்யலாம்.

​​வழுக்கை வருவதற்கு முன் என்ன செய்யலாம்?( What can be done before baldness comes?)

முடியின் பராமரிப்பு , வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இது வழுக்கை (Baldness)பிரச்சனையை தடுக்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் தலை குளியலும் ஒரு நாள் எண்ணெய் குளியலும் அவசியம். மாதம் ஒரு ஆயில் மசாஜ் செய்து கொள்வது மயிர்கால்களுக்கு உயிர் கொடுக்கும்.

ஆயில் மசாஜ் செய்வதற்கு தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் ,ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை ஏற்றது.வழுக்கை விழுவதைத் தடுக்க,To prevent Baldness,annaimadi.com,Baldness,​வழுக்கை வருவதற்கு முன்  What can be done before baldness comes?,​வழுக்கை தோன்றிய உடனே,வழுக்கையும் பராமரிப்பும் (Baldness and maintenance),அன்னைமடி

தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஊறவைத்த வெந்தயத்தை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். இது முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

வறண்ட முடியை பொலிவாக்கும். வெந்தயம் குளிர்ச்சி என்றால், தேங்காயைப் பிழிந்து முதல் பாலை எடுத்து தலையில் தடவி குளிக்கலாம்.

கொத்து கொத்தாக விழுந்தால் முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கற்றாழை ஜெல்லை முடியின் வேர் முதல் நுனி வரை தடவி நன்றாக ஸ்கால்ப் பகுதியில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து மிதமான குளிர்ந்த நீரில் அலசுங்கள். விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு முடிக்கு ஊட்டமளிக்க உதவும். முடியின் வளர்ச்சியை ஊக்கபடுத்தும். முடிக்கு வலுகொடுக்கும். முடி உதிராமல் பாதுகாக்கவும் செய்யும்.

வாரம் இருமுறை முடியின் வேர் முதல் நுனிவரை தடவி மசாஜ் செய்யுங்கள். ஐந்து ஆறு முறை செய்த பிறகு பலனை நிச்சயமாக உணர்வீர்கள்.

​வருமுன் காப்போம்

  • வழுக்கைக்கு (Baldness) முன்பு பொடுகு பிரச்சனை உண்டாகும். இதுவும் ஒருவித அறிகுறியே. அப்படி இருப்பவர்கள் வேப்பிலையை அரைத்து முடியின் வேர்க்கால்களில் மட்டும் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீர்க்கப்படும். முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • மிக விட எளிய பராமரிப்பு சாம்பார் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வழுக்கைப் பகுதியில் பத்து நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்யலாம்.தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கி செய்து வர நாளடைவில் வழுக்கை பகுதியிலும் சிறிது முடி வளர்வதைக் காணலாம். வழுக்கையின் தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம்.
  • செம்பருத்தி பூ அல்லது இலை, கறிவேப்பிலை, மருதாணி,கற்றாழை,கரிசலாங்கண்ணி, எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, தயிர் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து முடிக்கு பேக் போல் போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும்.ஷாம்பு உபயோகிக்காமல் வெறுமனே அலசினால் நல்லது. தேவையெனில் ஒரு கொத்து வேப்பிலையையும்சேர்த்து கொள்ளலாம். இது முடியில் வேர்க்கால்களில் படிந்திருக்கும் கிருமிகளை வெளியேற்றும்.

         மாதம் ஒரிரு முறை  இப்படி செய்ய வேண்டும்.

  • மிளகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்த சாம்பார் வெங்காயத்தை வழுக்கை பகுதியில் தடவி மசாஜ் செய்யலாம்.

வழுக்கை அறிகுறி தோன்றி முடி கொட்ட தொடங்கும் போது ஊட்டசத்தான உணவு, முறையான பராமரிப்பு இருந்தால் வழுக்கை இல்லா தலைமுடி ஆண்களுக்கும் சாத்தியமே!!

Leave a Reply

Your email address will not be published.