நச்சுத்தன்மையை நீக்கும் வாழையிலைச் சாப்பாடு (Banana leaf meal removes toxins)

வாழையிலையில் (Banana leaves) சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெருமை!

வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

 எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை நட்டு தயாராக வைத்திருந்தனர் தமிழர்கள் .

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரம். அதாவது அதன் சிறந்த நஞ்சு முறிப்புத்தன்மையின் நன்மை கருதியே அவ்வாறு செய்திருக்கின்றனர்.

விருந்துகளில் அல்லது அன்ன தானங்களில் வாழையிலையில் (Banana leaves) உணவு உண்பது தொன்று தொட்டு பழகி வந்த வழக்கம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பல விதமான அற்புத நன்மைகள் (Amazing benefits of eating banana leaves)

வாழை இலையில் (Banana leaves) சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கறுப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் பயன்படுகிறது. வீட்டில் தட்டில் சாப்பிடுவதை விட விழாக்களில்  அதிகமாக  உண்பதற்கும் வாழை இலையும் (Banana leaves) ஒரு காரணம்.

வேலைக்கு செல்பவர்கள் வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிட்டு வந்தால் உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது.

அது மட்டுமா வாழை இலையில் (Banana leaves) சாப்பாடு கட்டி கொண்டு போனால்,உணவு இலகுவில் கெடாது. அதிலிருக்கும் உணவின்  வாசமே தனி!

அன்னைமடி,annaimadi.com, benefits of eating banana leaf?,வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?,பசி உணர்வு ஏற்படும்,நோய் எதிர்ப்பு சக்தி ,சரும நலம் சிறக்கும்,வயிற்று புண்கள்,Feeling hungry, immune system, skin health, stomach ulcers

நீண்டஆயுள் தரும்

தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும். சாட்சியாக நம் முன்னோர்கள் தினமும் வாழை இலையில் சாப்பிட்டதால் உடலில் எவ்விதமான நோய்களுமின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர்.

எனவே பிளாஸ்டிக் (Plastic plate)அல்லது இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட பிளைட்களில் சாப்பிடுவதை விட வாழையிலைகளை உபயோகிப்பது சிறந்தது.

   

சரும நலம் சிறக்கும்

ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய அனைவருக்குமே தோலில் ஈரப்பதம் குறைந்து, வறட்சி தன்மை ஏற்பட்டு தோலில் சுருக்கங்கள் உண்டாகும். இத்தகைய தன்மை உங்கள் உடலில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் தினந்தோறும் வாழை இலையில் சாப்பிடுவது சிறந்தது.

அப்படி நாம் செய்து வந்தால் தோலில் நீர் வறட்சி ஏற்படாமல், தோல் சுருக்கங்கள் வராமல், பளபளப்புத் தன்மை காக்கப்பட்டு எப்போதும் இளமை தோற்றத்தை கொடுக்கும்.

வயிற்று புண்கள்

உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடு ம் உணவை நன்கு செரிமானம் அடைய உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.

தீக்காயங்கள்

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். தீக்காயம் விரைவில் ஆறுவதற்கு  வாழை  இலையின் குளுமை உதவும்.

தீ விபத்தில் சிக்கி உடல்நலம் தேறும் நோயாளிகள், தினமும் பச்சை வாழை இலையில் படுத்துறங்கி வந்தால் தீக்காயங்கள் மிக சீக்கிரத்தில் ஆறும்.

கண் பார்வை குறைபாடு

வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.நமது முகத்தில் இருக்கும் கண்களின் பெரும்பகுதி நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆனது. 

வாழை இலையில் இருக்கும் நீர் தன்மை கண்களில் ஈரப்பதம் , கண் பார்வை குறைபாடு, கண் அழுத்தம் போன்ற குறைகள் வராமல் பாதுக்காக்கிறது.அன்னைமடி,annaimadi.com, benefits of eating banana leaf?,வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?,பசி உணர்வு ஏற்படும்,நோய் எதிர்ப்பு சக்தி ,சரும நலம் சிறக்கும்,வயிற்று புண்கள்,Feeling hungry, immune system, skin health, stomach ulcers

நோய் எதிர்ப்பு சக்தி  கிடைக்கும்

நமது உடலில் வாத பித்த, கபம் தொடர்பாகவே  நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றின் சமநிலைத் தன்மை மாறுபடும் பட்சத்தில் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.

வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்றின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்படுகிறது.உடலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்புத்திறனும் ஏற்படுகிறது.

பசி உணர்வு ஏற்படும்

உடலில் இருக்கும் சத்துக் குறைபாடுகள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக ஒரு சிலருக்கு பசி உணர்வே இல்லாமல் போகிறது.

வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

வாழை இலைச் சாப்பாடு

முற்காலத்தில் இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை (Banana leaves) மட்டுமே. அதனால் தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

இருந்தும் நமக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலையில் (Banana leaves)  பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவதால் அந்த வித கெடுதலும் இல்லை . ஆனால் பிளாஸ்டிக் தட்டில்?  

அன்னைமடி,annaimadi.com, benefits of eating banana leaf?,வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?,பசி உணர்வு ஏற்படும்,நோய் எதிர்ப்பு சக்தி ,சரும நலம் சிறக்கும்,வயிற்று புண்கள்,Feeling hungry, immune system, skin health, stomach ulcers

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

தமிழர்கள் மற்ற நேரங்களை விட அதி முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர்.

அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர்.

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

இனிமேலாவது முடிந்த வரை பதிலாக  வாழை இலையை உபயோகப்படுத்துவோம்!

நாமும் நலம் பெறுவோம். மண்ணையும் காப்போம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *