வாழைப்பழ பணியாரம் (Banana snack)
சுவையான வாழைப்பழ பணியாரம் (Banana snack)
சாதாரண வாய்ப்பன் மாவில் வாழைப்பழத்தை சேர்த்து செய்வதே வாழைப்பழபணியாரம் அல்லது வாழைப்பழவாய்ப்பன் (Banana snack). இந்த பலகாரம் சாதாரண வாய்ப்பனை விட மிகவும் சுவையானது.செய்வதும் மிக எளிது. வாய்ப்பன் என்பது ,இலங்கையின் தேநீர்க்கடைகளில் எப்போதும் இருக்கும் ஒரு பலகாரம்.
இரண்டு வாய்ப்பனை சாப்பிட்டு தேநீரையும் குடிக்க காலை பசி அடங்கிவிடும்.
வாய்ப்பன் என்பது மா, சக்கரை ஆகிய பொருட்களை சேர்த்து நீர் விட்டு குழைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும்.
இது ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதிகளில் விரும்பி உண்ணப்படும் ஒரு சிற்றுண்டி. வாழைப்பழம் அதிகமாக கிடைக்கும் காலத்தில், அல்லது வாழைப்பழம் அதிகம் பழுத்து விட்டால்,வாழைப்பழபணியாரம் செய்வார்கள்.
இலகுவான இனிப்பு சிற்றுண்டி
வாழைப்பழ வாய்ப்பனை 2 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.வாழைப்பழத்தில் கேக், பணியாரம், பான் கேக்,(pan cake) போன்ற இனிப்பு பலகாரங்கள் (Snack) செய்யப்படுகின்றது. ஆனால் இது எளிதானது. அதனால் திடீர் விருந்தினர் வந்தாலும் கவலை இல்லை.
இலகுவாக சுவையாக வாழைப்பழ வாய்ப்பன் செய்திடலாம்.
மாலைநேரத்தேநீருக்கு சிற்றுண்டி எதுவும் இல்லையா?
வீட்டில் எப்போதும் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக செய்திடலாம். காலையுணவாகவும் இதனை சாப்பிடலாம்.
வாழைப்பழ வாய்ப்பன் செய்ய தேவையான பொருட்கள்
- கோதுமை மா
- சர்க்கரை அல்லது சீனி
- எண்ணெய்
- வாழைப்பழம் மட்டுமே.
- அப்பச்சோடா ,உப்பு சிறிது
செய்முறை
கோதுமை மா, சீனி ,வாழைப்பழம் , பேக்கிங்பவுடர் ,உப்பு ,ஆகியவற்றைச்சேர்த்து நன்கு பிசைந்து குழைக்கவும். அதன் பின் சிறிது சிறிதாக நீரை தெளித்து குழைத்து (மா தளர்வாக இருக்க வேண்டும்) சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ,எண்ணெய்சூடானதும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மாலை நேரத்தேநீருக்கு ஏற்ற இனிப்பான சிற்றுண்டி இது.எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.
சில பிள்ளைகள் வாழைப்பழம் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்தவிதமாக வாழைப்பழ வாய்ப்பன் செய்து கொடுங்கள். விரும்பி உண்பார்கள். அதோடு வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களையும் கிடைக்க செய்துவிடலாம்.இடைநேரபசிக்கு எல்லோருக்கும் உகந்த சிற்றுண்டி.