காஜலின் அழகிற்கு காரணம் என்ன? (Beauty of Kajal)
மேக்கப் போடாமலும் அழகாக (Beauty of Kajal) காட்சியளிக்கும் நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை காஜல் அஹர்வால்.
அவரது தாயார் தயாரித்துக் கொடுக்கும் ஒரு ஃபேஸ் பேக் தான் தனது அழகிற்கு முக்கிய காரணம் என்று ,அவர் சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி குறிப்பிட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
அந்த ஃபேஸ் பேக்கானது (Face pack) தேன், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றினால் ஆன கலவையாகும். இது அவருக்கு மிகவும் பிடித்த சரும பாதுக்கப்பு முறை.
இந்த ஃபேஸ் பேக்கை (Natural facepack) தான் ,காஜல் தனது முகத்தை சுத்தப்படுத்த பயன்படுத்திக் கொள்கிறார்.
தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
காஜலின் அழகு ரகசியங்கள்
காஜல் அகர்வால் தனது அழகைப் பராமரிக்க(Beauty of Kajal) தினமும் அவர் கிளீனிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங் செயல்முறையை தனது சருமத்திற்கு தவறாமல் மேற்கொள்கிறார்.
தேவையான போது மட்டுமே காஜல் மேக்கப் போட்டுக் கொள்கிறார்.மேக்கப் சாதனங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதால், முடிந்தவரை தேவைப்படாத போதெல்லாம் மேக்கப் இல்லாமல் இருக்கவே காஜல் விரும்புகிறார்.
சருமத்தில் மீதமுள்ள அழகுசாதனப் பொருட்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு அனைத்தையும் நீக்கிவிடுகிறார். ஏனெனில் அவை சருமத்தைச்சேதப்படுத்தும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.அதோடு அவர் பயன்ப்படுத்தும் கண் சொட்டுகள்,அவருடைய கண்களின் அழகை மேம்படுத்த உதவுகிறது.
இயற்கையான ஃபேஸ் வாஷ் (natural face wash) மூலம் அவர் முகத்தை கழுவுவதை வழக்கமாக செய்கிறார்.
சூரியகதிர்களிடம் இருந்து தனது தோலைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்(Double protection, broad-spectrum sunscreen lotion) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தான் வெளியே செல்கின்றார்.

இயற்கைப் பொருட்களினால் சரும பாதுகாப்பு
இயற்கையுடன் இணைந்து செல்வதையே விரும்புகிறார் மற்றும் இயற்கையான பழங்களை அடிப்படையாகக் கொண்ட மாய்ஸ்சரைசர்களைப் (natural fruit-based moisturizers) பயன்படுத்தி , அவருடைய சருமத்தைப் பாதுகாத்துக் கொள்கிறார்.
காஜல் அகர்வால் அவரது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பாதாம் ஸ்கரப்பைப் பயன்படுத்துகிறார்.
இந்த ஸ்கரப்பானது பொடி செய்யப்பட்ட பாதாம் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
காஜல் அகர்வால் இந்த பாதாம் ஸ்கரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துகிறார்.
நடிகை காஜல் அகர்வால் சரும பராமரிப்புக்காக எப்போதும் தேங்காய் சார்ந்த
பொருட்களைத் தான் பயன்படுத்துகிறார்.இவரைப் பொறுத்தவரை இந்தவகைப்பொருட்கள் தான் சருமத்திற்கு
ஊட்டமளித்து, வறட்சி அடையாமல் தடுக்கிறது என்று கூறுகிறார்.
அழகாக காட்சியளிக்க வேண்டுமானால்,கிளீனிங்,டோனிங், மாய்ஸ்சுரைசிங் என சற்று சிரமப்பட வேண்டும்
என்கிறார்.அவரது அழகு ரகசியத்தின் உச்சம் எது எனகேட்டால், அதுதேங்காய் எண்ணெயை
(Coconut oil) தான்.ஏனெனில் தேங்காய் எண்ணெய் சருமத்தை முழுவதுமாக
வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
கவர்ச்சிகரமான தோற்றத்துடன் அழகான புன்னகையையும் கொண்டுள்ள ஒரு அழகான இளம் பெண் இவர்.
ஒரு கவர்ச்சியான உருவத்துடன் அவரைப் போன்ற ஒளிரும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற எல்லோருமே விரும்ப தான் செய்வார்கள்!