ரோஸ் வாட்டர் (Beauty rose water)
அழகாய் இருக்க எல்லோரும் அதிக அளவு அக்கறை, முயற்சி எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர் (Beauty rose water).ரோஸ் வாட்டர் அன்றாடம் பயன்படுத்தி உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் பேணலாம்.
ஏனெனில் ரோஸ் வாட்டர் அதிக சக்தி வாய்ந்தது. அதிலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
சரும அழகு, முக அழகு அழகை மெருகேற்ற என கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்துவதை விட, ஒரே ஒரு பொருளாக ரோஸ் வாட்டரை பயன்படுத்தி அழகை அதிகரிக்க முடியும்.ரோஜா பன்னீர் என்றழைக்கப்படுகின்ற ரோஸ் வாட்டரின் (Beauty rose water) பயன்கள் ஏராளம்.
மாசு மருவில்லாத அழகிற்கும், உடலின் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டுவதற்கும், வயிற்றுப் புண்களை (Ulcer) சரிசெய்வதற்கும் ரோஸ் வாட்டரின் (Beauty rose water) பங்கு மிகப் பெரியது.
சரும அழகை மேலும் மெருகூட்ட (Beauty rose water)
ரோஜாப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் பன்னீர் ரோஸ் வாட்டர் இல்லாமல் இன்றைக்கு எந்த ஒரு அழகு ஒப்பனைகளும் (make up) இல்லை.
உண்மையான, தரமான ரோஸ் வாட்டர் என்பது புதிய பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு ஆவி வடித்தல் முறையின் (Steam Distillation Method) மூலம் செய்யப்படும் முறை மட்டுமே உங்களுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் கழுத்தை சுற்றி ஒற்றிக் கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை சுத்தப்படுத்தலாம்.
புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற
முகம் எப்போதுமே பொலிவிழந்து காணப்படால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும்,
20 நிமிடங்கள் வரை அப்படியே இதை ஊற விட்டு விட வேண்டும்.பின் சோப்பு போடாமல் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர முகம் பொலிவாகும்.
முகம் சோர்ந்து காணப்பட்டால், அப்போது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
சரும கருமையைப் போக்க
வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாற ,ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும்.
வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டாலும், சருமத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
ஒரு ஸ்பூன் பச்சை பயறு தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கருமையான பகுதிகளில்பூசி வந்தால் வெயிலினால் கறுத்த இடம், சீக்கிரம் வெண்மையாக மாறிவிடும்.
ரோஸ் வாட்டருடன் அழகுக் குறிப்புகள்
ரோஸ் வாட்டரில் சிறிது கற்பூரத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
புதினா சாற்றை ரோஸ் வாட்டரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும்.
அனைத்துக் குறிப்புகளும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொருத்தமானது.
முக பருக்களைப் போக்க
முகத்தில் பருக்கள் நீங்க , சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும். முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும். முகத்தின் அழகு கூடும்.
முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், முக பருக்கள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து, அதை எடுத்து உங்களது முகப் பருவின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இரவில் பூசிக் கொண்டு அப்படியே விட்டு விடுங்கள்.
காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். தினம்தோறும் இதை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பரு இருந்த தழும்பு கூட மறைந்து விடும். சருமம் அழகாக மாறிவிடும்.
கரும்புள்ளிகளைப் போக்க
ரோஸ் வாட்டருடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் மாஸ்க் போட்டு, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
இப்படி செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவை நீங்கி விடும்.
அழகான உதட்டை பெற
உங்கள் உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.லிப்ஸ்டிக் பயன்படுத்த தேவை வராது.
பொலிவான கண்களுக்கு
காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
இரவு நேரத்தில் கண்கள் மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், (cotton) பஞ்சில், கொஞ்சம் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களுக்கு மேல் 10 நிமிடங்கள் வைத்திருக்க கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
சரும சுருக்கங்களை நீக்க
சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் , சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசவும்.சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவி வர , சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
அதோடு சுருக்கங்கள் வருவதும் தடுக்கப்படும்.
கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி அல்லது சந்தனப் பொடி, உடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
தலைமுடியை மென்மையாக்க
கண்டிஷனராக ரோஸ் வாட்டர்
ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்யலாம். அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை கலந்து தேய்த்து தலையைக் கழுவலாம்.
இதனால் தலைமுடி பட்டுப் போன்று அழகாக மாறும்.
ரோஸ் வாட்டரை ஓலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலசினால், முடி அழகாக மின்னும்.