அனுஷ்காவின் அழகு (Beauty Secrets of Anushka)

தமிழ் மற்றும் தெலுங்கில் தனது நடிப்புத் திறமையால் மிகவும் பிரபலமான ஓர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. நடிகைகளுள் நல்ல உயரமான மற்றும் சிக்கென்று இருக்கும் நடிகை என்றால் அது அனுஷ்கா ஷெட்டி தான்.

பின் திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தனது நடிப்புத் திறமையால் அதை சிறப்பாக பயன்படுத்தி, தற்போது பலரது கனவு கன்னியாக உள்ளார்.

விரைவில் 40 வயதை தொடவிருக்கும் அனுஷ்கா இன்னும் அழகான உடலமைப்பு மற்றும் தோற்றத்தில் காட்சியளிப்பதன் ரகசியம் (Beauty Secrets of Anushka) என்னவாக இருக்கும் என அறிய யாருக்கு தான் ஆவல் இருக்காது.

அனுஷ்கா ஷெட்டியின்அழகு (Beauty Secrets of Anushka)

அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்களுள் ஒன்று தண்ணீர். இவர் தினமும் போதுமான அளவு தண்ணீரை தவறாமல் குடிக்கிறார்.

அழகைப் பராமரிக்க  அனுஷ்கா எப்போதும் இயற்கை வழியையே நம்புவாராம். காஸ்மெடிக்ஸ் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பாராம்.

அதில் இவரது அழகு ரகசியங்களுள் முக்கியமான ஒன்று காலை உணவாக பிரட் மற்றும் தேன் எடுப்பது.

மேலும் தேன் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. பொதுவாக இதை சருமத்தில் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் மாயங்கள் நிகழும். அதிலும் இதை உட்கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

அனுஷ்கா ஷெட்டி அழகான ஸ்லீவ்லெஸ் (Sleeveless) உடைகளை பல நேரங்களில் அணிந்து அசத்தியுள்ளார். இவர் தனது முழங்கை மற்றும் முழங்கால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றினை, கடலை மாவுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துவாராம்.

இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதாக கூறுகிறார்.

அழகு என்று வரும் போது அதில் சருமம் மட்டுமின்றி, தலைமுடியும் அடங்கும். அனுஷ்கா ஷெட்டி தனது தலைமுடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, எண்ணெயை தவறாமல் பயன்படுத்துகிறார்

அதுவும் ஒலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தான் பயன்படுத்துவாராம்.

இந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரிங் போல செயல்பட்டு, ஆரோக்கியமான அழகிய தலைமுயைக் கொடுக்குமாம்.

Beauty Secrets of Anushka,Annaimadi.com,About anushka,natural beauty,beauty of yoga,அன்னைமடி,அனுஷ்காவின் அழகின் காரணம்

அனுஷ்கா பின்பற்றி வரும்உடற்பயிற்சிகள்

நடிகையாக இருந்தால், நன்கு ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

அனுஷ்கா எப்போதும் தான் ஃபிடடாக இருக்க வேண்டுமென, அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். உடற்பயிற்சியின் மூலம் உடல் அமைப்பை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை நன்கு அறிந்தவர்.

அனுஷ்கா ஷெட்டிக்கு யோகாவின் நன்மைகள் குறித்து நன்கு விரிவாகத் தெரியும். ஆகவே தினமம் தவறாமல் யோகா பயிற்சியை மேற்கொள்வாராம்.இவர் ஆரம்ப காலத்தில் யோகா மாஸ்டராக பணியாற்றினார்.

இதை தனது அன்றாட செயல்படுகளுள் முதன்மையான ஒன்றாக கருதி மேற்கொள்வாராம்.  

சொல்லப்போனால் இவரது அழகிற்கு யோகாவின் பங்களிப்பும் முக்கியமானதாக கூறுகிறார்.

அனுஷ்கா தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்வாராம். இது அவரது ஸ்டாமினாவிற்கு காரணமாகவும் கூறுகிறார்.

மேலும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சியானது அழகிய உடலமைப்பைப் பெற உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறதாம்.

டயட் அனுஷ்கா காய்கறிகள், பழங்கள் மற்றும் நீரை அதிகம் உட்கொள்வாராம். ஆரோக்கியமான உடலைப் பெற நல்ல உணவுப் பழக்கம் உதவுவதாக அனுஷ்கா நம்பிக்கை கொண்டுள்ளராம். அனுஷ்கா தினமும் தனது இரவு உணவை 8 மணிக்கே முடித்துவிடுவாராம்.

தினமும் குறைந்தது 2-3 மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொண்டுவிடுவராம். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று, உடல் ஃபிட்டாக இருக்குமாம்.

மேலும் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்குமாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்று வரை பின்பற்றி வரும் ஃபிட்னஸ் மற்றும் அழகு ரகசியங்கள் (Beauty Secrets of Anushka) ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *