அழகுக்கு அழகு சேர்த்திட (Beauty tips)

 நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு இயற்கை பொருட்களில் நிறைய மருத்துவகுணங்கள், அழகுப்படுத்தும் குணங்கள் (Beauty tips) உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தி நல்ல பலன்களைப் பெறுவோம்.

ஒவ்வொருவரும் அழகாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். மனிதனின் பார்வைக்கு பார்வையே அழகு மாறுப்படுகிறது. ஒவ்வொருவரும் சுத்தமாகவும் அழகாகவும் (Beauty tips) இருந்தால் உடல், மனம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

முகக்கறுப்பு மாற (Beauty tips)

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சம அளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.
அழகுக்கு அழகு சேர்த்திட ,Beauty tips,அன்னைமடி,அழகு குரிப்ப்புகள்,முக அழகிற்கு ,annaimadi.com,face beauty tips,beautytips for face,
பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால், முக கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு மாற (Beauty tips)

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் புதினாசாறு, எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைக்கவும்.

அதனை  முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.

சருமம் மெருகேற (Beauty tips)

வறட்சியான சருமம் கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து அதில் பயிற்றம் மாவு சேர்த்து சருமம் எங்கும் பூசி 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் மெருகேறும்.

அழகுக்கு அழகு சேர்த்திட ,Beauty tips,அன்னைமடி,அழகு குரிப்ப்புகள்,முக அழகிற்கு ,annaimadi.com,face beauty tips,beautytips for face,
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து அதில் பால் சேர்த்து நன்கு குழைத்து மேனி எங்கும் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் பளபளக்கும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.

முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக

தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

அழகிய உதடுகளுக்கு

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பது தான்.

இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும்.

இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *