கண்களின் அழகு (Beauty tips for eyes)
பொதுவாக முகத்தின் அழகை ,பொலிவை கண்கள் தான் காட்டும். ஆகவே அத்தகைய கண்களை சரியான முறையில் கண்களை பராமரித்து முகத்தின் அழகை (Beauty tips for eyes) இன்னும் மெருகேற்றுவோம்.
கண்களின் அழகிற்கான குறிப்புகள் (Beauty tips for eyes)
கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க பச்சை காய்கறிகள், மஞ்சள் நிறக் காய்கறிகள்,மற்றும் கீரைகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியத்துடனும், அழகுடனும் இருக்கும். அதாவது கரட், ஆரஞ்சு,பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது.
மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. பால் பொருட்கள் பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவைகண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது.
கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன், நன்றாக சோப்பு போட்டு முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பழக்கம் கண்மையில் இருக்கும் இரசாயப் பொருட்களிலிருந்து, கண்களைப் பாதுகாக்கும்.
வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது, மறக்காமல் முகத்தையும், கண்களையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் மற்றும் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறி கண்கள் பாதுகாப்புடன் இருக்கும்.
கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்கள் சோர்வடையும் நேரத்தில் 10 நிமிடம் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, பின் வேலை செய்தால் கண்கள் புத்துணர்ச்சி (Beauty tips for eyes) பெறும்.
கண்களின் அழகை பாதிப்பவை
கண் பைகள்
கருவளையம்
சரியான தூக்கம் இல்லாமை
கண்களுக்கு ஓய்வு இல்லை
தவறான கண் அழகு சாதன பொருட்கள் போன்றவை முக்கியமானவை.
கண்களின் அழகை கெடுப்பதில், முதன்மையாக உள்ளது கண்ணிற்கு கீழ்வரும் பைகள்தான்.கண் பைகள் உங்கள் முக அழகை மிகவும் குறைத்துக் காட்டும்.
உங்களின் தோற்றத்திற்கு முதிர்ச்சியை தந்து உங்களின் அழகான தோற்றப் பொலிவை இது கெடுத்து விடுகிறது. இந்த கண் பைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கண் பைகள் ஏற்பட மிகவும் பொதுவான காரணம் இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, டிஜிட்டல் ஸ்க்ரீன் அதிகம் பயன்படுத்துவது ஆகும்.
அதோடு கண்பைகளை அகற்ற காலை, இரவு என இரண்டு வேளையும் கண்களின் மேல் குளிர்ந்த தேயிலை பைகள் அல்லது வெள்ளரிதுண்டுகளை வைக்கவும்.
இவை இந்த வீக்கம் குறைவதற்கு நல்ல வழியில் உதவுகிறது இதனால் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது.உங்கள் கண்களுக்கு தினமும் காலை குளிர்ந்த ஐஸ் நீரில் கழுவவும்.
கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, வெள்ளரிக்காயின் சதைப்பகுதியை எடுத்து கண்களை மூடிக் கொண்டு வைத்து, 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இதனை தினமும் செய்து வந்தால், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு சோர்வு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் கருவளையமும் நீங்கும்.
காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை கண்கள் வேலை செய்கின்றது.
அதாவது,கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கமும் ஏற்படுத்துகின்றன.
உங்களுடைய கண்கள் மட்டும் அழகான தோற்றத்தினை கொடுத்து விடாது, உங்கள் முழு முகத்தின் அழகு புருவ அழகிலும் சார்ந்து உள்ளது. இயற்கையான கண்மைகளை பாவிக்கவும்.
இது கண், எப்போதும் இதற்கு எதை பயன்படுத்தினாலும் மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்.
கண்கள் சிறியதாக இருப்பவர்கள் ,அவற்றை பெரிதாக காட்ட மிதமான நிறங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்கள் உங்கள் கண்களை மேலும் சிறியதாக காட்டும்.
எனவே எப்போதும் அடர்த்தியான நிறங்களை தவிர்த்து விட்டு மிதமான வண்ணங்களை உபயோகப்படுத்துவது எப்போதும் சிறந்தது.