ஆண்களிற்கான ஆரோக்கிய அழகு குறிப்புகள்(Beauty tips for men)
இது அழகு குறிப்பு(Beauty tips for men) என்பதை விட ஆரோக்கிய குறிப்பு என்று சொல்லலாம். இந்த குறிப்புகள் மூலம் சரும ஆரோக்கியம் பேணப்படும். தோல் இளமையாகும்.இதனால் இளமையானதோற்றம் உண்டாகும்.
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.
ஆண்களும் அழகுக்கு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் அழகுடன் ஆரோக்கியமும் தொடர்புட்பட்டுள்ளது.
வீட்டிலே செய்யும் சில இலகுவான அழகு குறிப்புகள் (Beauty tips for men)
ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
சிகரெட் பிடிப்பவர்களின் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீற்றூட் சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளை சாற்றை உதடுகளில் பூசிவர உதட்டின் கருமை நீங்கி விடும்.
ஆண்களின் முக அழகிற்கு (Beauty tips for men)
வெயிலில் வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும்.
பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.
வெள்ளரிக்காயை நன்றாக மையாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும்.
வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கறுக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்
தேன், முட்டை
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம்.
15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். முகத்தில் எண்ணெய்த்தன்மை இருப்பவர்கள் தக்காளி பழ மாஸ்க் பயன்படுத்தலாம்.
நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி, பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும்.
இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.
முடி அழகாக
சின்ன வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் நான்கு தேய்த்து, பின் அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் முடி வளர தொடங்கும்.
தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, முடிக்கு தடவி குளித்து வர முடி உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் முடியும் நன்கு வளரும்.
செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து வெள்ளை முடி உள்ள இடங்களில் தடவவும்.
அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்குவதுடன் வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்
உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்.
தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிர்க்கவும். தலைமுடியை காய விடாமல் சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.
முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
முக வரட்சியினை போக்க (Beauty tips for men)
கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம்
ஒருமுறை பூசி வரலாம்.
ஒலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும். வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம்.
இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
ஒருவரின் வெளிபுற தோற்றம் (Beauty tips for men) மிகவும் முக்கியம்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க.