தக்காளிசாற்றில் அழகு குறிப்புகள் (Beauty tips with tomato)
தக்காளிச்சாறு முக அழகிற்கு (Beauty tips with tomato) ஏராளமான நன்மைகளைத் தருகின்றது.தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.
தக்காளி சாறு தரும் முக அழகு (Beauty tips with tomato)
தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.
கிளிசரின் உடன் தக்காளிசாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.
மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது.
சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.
தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
வெயிலால் ஏற்பட்ட சருமத்தின் கருமை அகல
அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.கருமை விரைவில் அகன்றுவிடும்.
முகப்பொலிவுக்கு தக்காளிசாறு

தக்காளி ஃபேஸ் வாஷ் (Tomato face wash)
தக்காளி ஃபேஸ் பேக் (Tomato face pack)
தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.