செலவில்லாத அழகுக் குறிப்புகள் (Beauty tips)

வீட்டில் உள்ள பொருட்களைப் பாவித்து இந்த அழகுக் குறிப்புகளைச் (Beauty tips) செய்யலாம். இவை உங்கள் முக அழகை மேலும் மெருகேற்றி, மிளிரச் செய்யும்.முகப்பரு,வறண்ட தோல்,கரும்புள்ளி போன்ற அனைத்திற்கும்  நல்ல தீர்வு கிடைக்கும்.

வீட்டில் அன்றாடம் பாவிக்கும் பொருட்களைக் கொண்டே செய்வதால் . எந்தவிதமான எதிர்விளைவுகளும் ஏற்படாது.தைரியமாக செய்ய தொடங்கலாம்.குறிப்பாக இதற்காக  தனியான செலவு இல்லை.

(Beauty tips) அழகு குறிப்புகள்

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும்வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற
வைத்து குளித்தால், முகப்பரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.


இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

தோல் வரட்சி,தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.