வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட் சாறு (Beetroot juice for stomach ulcers)

வயிற்றுபுண்ணிற்கு ஒரு அருமையான இயற்கை மருந்து பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice). வாரத்தில் மூன்று முறை என தொடர்ந்து பீட்ரூட் சாறு தேனுடன் சாப்பிட்டு வர அல்சர் விரைவில் குணமாகி விடும்.

மாறி வரும் உணவுமுறைகளால் பலர் பலப்பல நோய்களால் அவதியுறுகிறோம். அதில் ஒன்று தான்அல்சர் எனப்படும் வயிற்றுபுண்.

மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் பீட்ரூட் கிழங்கும் ஒன்றாகும். அது பித்தப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்கிறது.

இரத்தத்தின் அளவினை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட பீட்ரூட்டில் பல வகை நன்மைகள் உள்ளன. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம்.இதில் உடலுக்கு தேவையான மெக்னிசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கல்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனிசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

பீட்ரூட் கிழங்கைச் சமைத்து அளவாக சாப்பிட்டு வந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.பீட்ரூட் சமைக்கும் போது அதில் எலுமிச்சம் பழச்சாறும் சேருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் கீரையில் விற்றமின் ‘ஏ’, இரும்புச்சத்து, ரிபோஃபிளேவின் அதிகமாக இருக்கின்றன. பீட்ரூட்டினை மட்டும் சாப்பிடாமல் அதன் கீரையையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் தினமும் புதுப்பிக்கப்படும். கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

ரத்தச் சோகை உள்ளவர்கள் பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ரத்த சோகை நோய் மிக விரைவாகக் குணமாகி விடும்.வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட் சாறு ,annaiamadi.com,Beetroot juice for stomach ulcers,அன்னைமடி,பீட்ரூட் சாற்றின் மருத்துவப் பயன்கள்,Benefits of Beetroot juice, nature medicine for ulcer,பீற்றூட் சாறு நன்மைகள் ,பீற்றூட் சாறின் மருத்துவ பயன்கள்

இதனால் விற்றமின் ‘சி’ நன்கு கிடைத்து வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறும்.

மூலநோய் குணமாகும். பித்தக் கோளாறு அகலும். கல்லீரல் பலம் பெற்று மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும்.சரும பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் சாறு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் கலந்து தடவினால் சரும பிரச்சனை நீங்கும்.

பீட்ரூட் சாற்றின் மருத்துவப் பயன்கள் (Benefits of Beetroot juice) 

நாள்தோறும் பீட்ரூட் சாற்றினை பருகி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து செரிமானப் பிரச்சனை சரியாகும்.

பீட்ரூட் சாறுடன் (Beetroot juice) வெள்ளரிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

பீட்ரூட் சாறை தினமும் பருகி வந்தால் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
 
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். 
 
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
 
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள்,பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice) தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
 தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

Leave a Reply

Your email address will not be published.