பீட்ரூட் இயற்கை ஹேர் டை..!(Beetroot hairdye )
நரை முடியை கறுப்பாக்க…
இளமையான தோற்றத்திற்கு சரும அழகு மட்டும் அல்லாது கூந்தலின் நிறமும் பங்கெடுக்கின்றது. சில நடுத்தர வயதில் இருப்பவர்களின் கூந்தல் கருமையாக இருப்பதால் வயதான தோற்றம் தெரிவதில்லை.
கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை விட நரைமுடி வந்து விட்டால் உடற் தோற்றத்தில் திடீரென அதிகமான மாற்றம் ஏற்படுகின்றது. கண்ட கண்ட இராசாயனப் பொருட்களாலான ஹேர் டைகளை பயன்படுத்தி இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாமல் இப்படியான இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துக் கொள்வோம்.
நரைமுடியை போக்க பீட்ரூட்டில் இயற்கை ஹேர் டை (Beetroot hairdye) எப்படி செய்வது என பார்ப்போம்.
பீட்ருட் ஹேர் டை (Beetroot hairdye ) தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்
இது ஒரு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹேர் டை (Natural hair dye). இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.
- கருவேப்பில்லை – ஒரு கப்
- சிவப்பு செம்பருத்தி பூ – 10
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – 200 மில்லி
- பீட்ருட் – ஒன்று
- காபி தூள் – மூன்று ஸ்பூன்
இயற்கை ஹேர் டை (Beetroot hairdye ) செய்முறை
படி 1
அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும்.
அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்.
தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

படி 2
காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு மிக்சிஜார் ஒன்றில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பீட்ருட்டை சேர்க்கவும்.
அதனுடன் ஒரு கப் கருவேப்பிலை, 10 சிகப்பு செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
படி 3
பின்பு இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
படி 4
இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும். எனவே இந்த பீட்ருட் ஹேர் டையை
(Beetroot hairdye) மாலை நேரங்களில் தயாரித்து ,மறுநாள் காலையில் பயன்படுத்தவது உகந்தது.
கருமையான நிறத்தை பெற பலதடவை பயன்படுத்த வேண்டும்.
இயற்கை ஹேர் டை தயாரிக்க முடியாதவர்கள், சந்தையில் விற்பனையில் உள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை களை பயன்படுத்தலாம்.