இரத்த விருத்திக்கு பீட்ரூட்சாதம் (Beetroot rice)

சில குழந்தைகள் உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவற்றால்  தன்மைகளைக் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கு  பீட்ரூட்டில்  சாதம் (Beetroot rice)  செயது கொடுங்கள். உடனடியான நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். இரத்தசோகையே இதற்கு காரணம்.

பீட்ரூட்டை அன்றாடம் உணவில்  எடுத்துக்கொள்ளும் போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.

பீட்ரூட் இரத்தவிருத்திக்கும் மிக சிறந்தது.

பார்ப்பதற்கு அழகாக நல்ல கலரில் இருக்கும் பீற்றூட் சாதம் ,பிள்ளைகளை  விரும்பி உண்ண வைக்கும்

மிக ஆரோக்கியமான உணவு பீட்ரூட்சாதம்.

மிக இலகுவான செய்முறையில் பீட்ரூட் சாதம்  செய்வதைப் பார்ப்போம்.

சுவையான கண்கவர் நிறத்தில் பீற்றூட் சாதம் (Beetroot rice) !

தேவையான பொருட்கள்

 1. நறுக்கிய பீட்ரூட் – 1
 2. கழுவிய அரிசி – 2 கப்
 3. பிரியாணி இலை – 2
 4. எண்ணெய் – சிறிதளவு
 5. மிளகு – சிறிதளவு
 6. கராம்பு – 3
 7. சீரகம் – 1 தேக்கரண்டி
 8. சோம்பு – 1 தேக்கரண்டி
 9. இலவங்கப்பட்டை – 1
 10. நறுக்கிய பச்சைமிளகாய் – 2
 11. நறுக்கிய வெங்காயம் – 1 பெரியது 
 12. இஞ்சி, வெள்ளைப்பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
 13. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 14. மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி அல்லது சுவைக்கேற்ப 
 15. வேகவைத்த பச்சை பட்டாணி – 1/2 கப்
 16. புதினா இலைகள் – சிறிதளவு
beetroot rice,beetroot rice receipe,indian rice receipe,indian cookking,healthy rice,remedy for animia

பீற்றூட் சாதம் (Beetroot rice) செய்யும் முறை

1.கடாய் ஒன்றில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அதில்  பிரியாணி இலை , மிளகு, கராம்பு, சீரகம், சோம்பு, இலவங்கப்பட்டை, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

2.சிறிது நேரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியதும் வெங்காயத்தைசேர்த்து கிளறவும்.

3.வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை பட்டாணி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். சிறிது நேரம் அதை கிளறி விடவும்.

4.துருவிய  பீட்ரூட்டை அதில் சேர்க்கவும். விரும்பினால் சிறிய துண்டுகளாகவும் போடலாம்.

5.கழுவிய அரிசியை அதில் சேர்த்து கிளறி, ருசிக்கேற்ப உப்பு போடவும்.

6.தேவையான அளவு நீர் சேர்த்து மூடி அவிய விடவும்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை (ரத்தசோகை)  பீட்ரூட்டில் உள்ள வேதிப்பொருட்கள்  தடுக்கிறது.

 லஞ்ச் பாக்ஸ்  (Lunch Box) இல் எப்பவும் தயிர் சாதம், புளிசாதம், லெமன் சாதம்  என செய்து கொடுப்பதை தவிர்த்து ,வித்தியாசமாக வண்ணமாக ஆர்ரோக்கியமான பீற்றூட் சாதம் செய்து கொடுத்து  குழந்தைகளை ஆரோக்கியமாக்குவோம்!!

Beetroot rice,lunch box menu,annaimadi.com,beetroot rice receipe,indian receipe

Check price

Leave a Reply

Your email address will not be published.