ஆப்ரிகோட் பழம் தரும் பயன்கள் (Benefits of Apricot)
உடல் நலன் பேண நாம் பழங்களை உண்டு வருகிறோம். உண்ணும் ஒவ்வொரு பழமும் பல்வேறு நோய்களை தடுக்கின்ற ஆற்றலையும் அதோடு உடலுக்கு நலனையும் கொடுக்கின்றன.அவ்வாறு உணவோடு சேர்க்கப்படும் பழங்களில் ஒன்று அதிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் (Benefits of Apricot) ஆகும். தமிழில் சர்க்கரை பாதாமி என்று அழைக்கப்படுகிறது.
அழகிய பொன்னிறமான மேல்தோலையும் ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டது இந்த பழம்.
சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறப் பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
ஆப்ரிகாட் பழத்தின் மருத்துவ பயன்கள் (Benefits of Apricot)
ஆப்ரிகாட் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்தசோகையை குணப்படுத்த வல்லவை.
பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும் குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மிகவும் மகத்தானது.
இதில் அடங்கியுள்ள நார்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது. ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு நன்மையானதாக விளங்குவது போன்று சருமத்திற்கும் சிறந்ததாகும்.இதிலுள்ள வைட்டமின் A சத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும்.

இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்துப் போராடும் சத்துக்கள் அடங்கிய பழமாகும். இந்த பழத்தில் இயற்கையான எண்ணெய் உள்ளது.ஆப்ரிகாட் எண்ணெய் தலை,சருமத்திற்கு சிறந்த ஊட்டம் தரும்.
இதில் உள்ள பீட்டா காரெட்டின்கள் மற்றும் இரும்புச்சத்து இரத்த உற்பத்திக்கு ஏற்றது
இதில் உள்ள காரெட்டினாய்டுகள் எல்டிஎல் என்னும் பொருள் கெட்ட கொழுப்பை நீக்கி இதய நோயை தடுக்கிறது.
பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்து செல் முதிர்வை தடுக்கிறது. இதில் உள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகிறது.
மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இப்பழத்தை நன்கு கழுவி வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.

மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கப் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இரவில் படுக்கும் போது சாப்பிட்டுவர பார்வைத்திறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.
வைட்டமின் A முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
வைட்டமின் A பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் இரண்டு ஆப்ரிகாட் பழத்தை இரவில் சாப்பிட்டுவர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவதும் கட்டுப்படுத்தப்படும்.
தினமும் ஆப்ரிகாட் பழங்களை உண்டு உடல் நலனை பேணுவோம்.