தாய்ப்பால் கொடுப்பதால் ஏராள நன்மைகள் (Benefits of breastfeeding)

தாய்ப்பால் கொடுப்பது (Benefits of breastfeeding) தாய்க்கும் சேய்க்கும் மிக நல்லது.ஏராள நன்மைகள்  இருவருக்குமே.

தாய்ப்பாலில் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் அனைத்துமே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான இணையான அளவில் கலந்திருப்பதுடன், உயிர்ச்சத்து, கனிமம் என்பவையும் காணப்படுகின்றன.

தாயின் உடலிலிருக்கும் பிறபொருளெதிரிகள், குழந்தைக்கும் தாய்ப்பால் (Benefits of breastfeeding) மூலம் வழங்கப்படும். குழந்தை பிறந்த சில நாட்களுக்கு சுரக்கும், சீம்பால் என அழைக்கப்படும் முதற்பாலின் மிக முதன்மையான இயல்பு இதுவாகும்.

இதனால் பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி,பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும்.

இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதனால், குழந்தைக்கு பல தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

Benefits of breastfeeding,annaimadi.com,breastfeeding good for mother& child,healthy baby

தாய்ப்பாலூட்டலில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 500 கலோரிகள் தாயின் உடலிலிருந்து பாவிக்கப்படுவதனால், குழந்தை பிறப்பின் பின்னர் ,தாயின் உடல் நிறை குறைந்து, பழையநிலைக்கு வர உதவும்

குழந்தைக்குப் பால் கொடுப்பதை இந்த மாதத்தில் தான் நிறுத்தவேண்டும் என்று கணக்கில்லை. எவ்வளவு காலம் தொடர்ந்து கொடுக்க இயலுமோ அவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது.

ஆனால், நிறைய பெண்களுக்குக் குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு பாலின் அளவு குறைந்துவிடும்.

வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய் பாலிலிருந்து மட்டும் கிட்டாது.

எனவே தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
தாய்ப்பால் குறையும் பொழுது ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ராகிக்கூழ், அரிசிக்கஞ்சி, மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.baby food maker,benefits of breastfeeding,

Check Price

இதைத் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து 3 அல்லது 4 வாரம் கழித்து அரை டம்ளர் கூழ் அல்லது வாழைப்பழம் கொடுக்கலாம். வேக வைத்த முட்டை, கீரை மசியல் என்று பல வகையான உணவுகளைக் கொடுக்கலாம். கடையில் குழந்தைகளுக்கென்று விற்கப்படும் உணவுகளைக் காட்டிலும், புதிய காய்கள்,பழங்களை அவித்து அரைத்து கொடுப்பது (baby food maker) மிக நல்லது.

குழந்தைக்கும் நல்ல உணவு.உங்களுக்கும் நிம்மதி.

குழந்தை ஆரோக்கியமாக  வளரும்.

தாய் பால் கொடுக்கவில்லை என்றால் ஏற்படும் தீமைகள்

மார்பக புற்றுநோய், சூலகப்புற்றுநோய், கருப்பையின் உள்வரி சவ்வில் ஏற்படும் புற்று நோய் போன்ற நோய்கள் தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு நோய் குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தாய்க்கு, குழந்தை பிறப்பின் பின்னரான குருதிப்பெருக்கு அல்லது குருதி இழப்பு கூடும்.

இவ்வாறாக பல சிக்கல் உண்டு.

சில தாய்மார்கள் தங்களுக்குள் உள்ள குறைபாடு காரணமாக, தாய்ப்பால் கொடுக்க முடியாது உள்ளது. இவர்கள் சரியான மருத்துவ உதவி எடுக்க வேண்டும்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எல்லாம்  இனிதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *