வண்ணமயமான குடைமிளகாயின் பயன்கள் (Benefits of Colourful Capsicum)
உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை (Benefits of Colourful Capsicum) அளிக்கும் குடைமிளகாயை தற்போது பெரும்பாலானோர் அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர். குடைமிளகாயில் விற்றமின் ‘சி’ (C) சத்து அதிகமுள்ளது. கூடவே இதில் விற்றமின் ஏ மற்றும் கல்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன.
பச்சையாக சாப்பிட கூடிய, சுவையான ஒரு சில காய்களில் குடைமிளகாயும் ஒன்று. இதனால் அதிலுள்ள அனைத்து சத்துக்களையும் பெற்றிடலாம்.
அவை பச்சை,சிவப்பு,மஞ்சள்,செம்மஞ்ச்சள் ஆகிய வண்ணங்களில்கிடைக்கின்றன.
இந்த வன்ன்கள் , நிறமி பாகுபாட்டினால் ஏற்படுவது அல்ல.பச்சை குடைமிளகாய் அடிப்படையில் பழுக்க அனுமதிக்கப்பட்ட பின் கிடைப்பதே சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய்.
சிவப்பு குடைமிளகாய் முழுமையாக பழுத்திருக்கும், மேலும் அவை வளர அதிக நேரம் தேவைப்படுகிறது.இதன் விளைவாக அவற்றின் இனிப்பு, பழம் சுவை வேறுபடுகின்றது. மறுபுறம், பச்சை குடைமிளகாய் விரைவில் அறுவடை செய்யப்படலாம் என்பதால், அவை லேசான கசப்பான சுவை கொண்டது.

குடைமிளகாய் (Capsicum) பழுக்கும்போது அவற்றின் ஊட்டச்சத்தும் உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. பச்சை குடைமிளகாய் ,மற்ற நிறக் குடைமிளகாய்களை விட விற்றமின் சி அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், பீட்டா கரோட்டின் அதிகம் கொண்டதாகவும் உள்ளது.
குடைமிளகாயின் பயன்கள் (Benefits of Colourful Capsicum)
உடல் எடையைக் குறைக்கும்
குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
மேலும் குடைமிளகாய் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை அதிக அளவில் எரிக்க உதவுகிறது. கலோரிகள் குறைந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய்களை கழுவி பச்சையாக உண்பதால். முழுச் சத்துக்களும் அப்படியே கிடைக்கும். சாலட், பிரியாணி, புலாவ், கறிகள், பனீர் மசாலா போன்றவற்றில் பயன்படுத்தலாம்.இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாதுஅ.திகச்சூட்டிலும் சமைக்கக் கூடாது.சத்துக்கள் வீணாகி விடும்.

வயது முதிர்வைத் தடுக்கும்
குடைமிளகாயில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு போன்ற தாதுசத்துக்களும் விட்டமின் ஏ, சி, பி6 போன்ற சத்துக்களும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை கொண்டுள்ளன.வயாதாகிறதே என்ற கவலை பலருக்கும் இருக்கும், அவைகள் குடைமிளகாயை அதிகம் சாப்பிட்டு, இளமையைத் தக்க வைக்கலாம்.
தோல் ஆரோக்கியம் பெறும்
இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான சருமத்தைக் கொடுக்கும். குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப்பொருள்,நம் தோலில் ஏற்படும் கருமை, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவும் குடைமிளகாய்
கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விற்றமின் ஏ, குடைமிளகாயில் அதிகமாகவே உள்ளது.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சனைகளை அண்டவிடாமலும் குடை மிளகாய் காக்கிறது.
இதனை குழந்தைகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.சிறு வயதில் இருந்தே கொடுப்பதனால் இளம் வயதிலே கண் தொடர்பான குறைபாடுகள் வரவிடாமல் தடுக்கலாம்.
புற்று நோயைத் தடுக்கும்
உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.
