பேரீச்சம்பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள் (Benefits of dates)
பேரீச்சம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள் (Benefits of dates) கருதி, இது ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.அதாவது ,பேரீச்சம்பழத்தில் நமது ஆரோக்கியம் (Benefits of dates) ஒளிந்திருக்கிறது.
சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம். இந்த பழத்தில் இரும்புச்சத்து, கல்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம்,விற்றமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விற்றமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை.
தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப்பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.
உடலில் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.
வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம்.
இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும் ,பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.
உடல் எடை அதிகரிக்க பேரீச்சம்பழம் (Benefits of dates)
குளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன.
ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும். இது சக்தி கொடுக்கும் மிகவும் சத்துள்ள பழமாகும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்கின்றது.
பேரீச்சம்பழத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் (Benefits of dates)
கண் பார்வைக் கோளாறுகள் நீங்குவதற்கு
விற்றமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.
மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.அல்லது தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.
உடல் மெலிவாக உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம்பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
அதோடு, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் விதத்தில் பேரீச்சம்பழகேக், பேரீச்சம்பழ லட்டு செய்து கொடுக்கலாம்.
பெண்களுக்கு
இரும்புச்சத்து நிறைந்துள்ள பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் தேவை . இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும், பேரீச்சம் பழம் மருந்தாகிறது.
மாதவிலக்கு முழுமையடையும் காலகட்டத்தில் ( மெனோபாஸ்) பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டம்.மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.
இதனை சரிசெய்ய பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.அதோடு இதய நோய்களும் அண்டாது.
சர்க்கரை நோயாளிகளுக்கு
இனிப்பான பழங்களைத் தவிர்க்கும் சர்க்கரை நோயாளிகள் கூட, அளவோடு பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட பேரீச்சம்பழங்களைச் சாப்பிடக்கூடாது.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கல்சியம் ,இரும்பு சத்து தேவை.இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
சருமப் பாதுகாப்புக்கு
பேரிச்சம்பழத்தில் நிறைய விட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.
பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம், இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
செரிமானம் சரியாகுவதற்கு
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால், செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து , செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை.
குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.
நரம்பு தளர்ச்சி நீங்குவதற்கு
அதிக வேலைப்பளு,மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவர்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.
இரத்த அழுத்தம், இரத்த சோகை விலகுவதற்கு
பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது.
இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு கிடைக்கின்றது.