பலவிதமான ஜூஸ்களும் அள்ளித்தரும் பலன்களும் ( Benefits of juices)

சோர்வுற்ற தருணங்களில் ,அபார சத்துக்களை (Benefits of juices) அள்ளி தருகின்ற பழங்களில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறுகளைப் பருகுங்கள்.இது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு தரக்கூடியது.

சோடா, இரசாயனம் ஊட்டப்பட்ட குளிர்பானங்கள், டீயை தவிர்த்து கொள்ளுங்கள்.

எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் ? (Benefits of juices)

மாதுளம்பழ ஜூஸ் (Pomegranate juice )

தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்துவர எலும்பு, தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்சனைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது. ரத்தசோகை குறையும்,இரத்த விருத்தி ஏற்படும்.

 Pomegranate Juice,annaimadi.com,natural juice

ஆப்பிள் ஜூஸ் (Apple juice)

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்.அதோடு முடி உதிர்தல்,பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை அளவுடன் சாப்பிடுவது நல்லது.

இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது.கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம்.

Healthy Apple Juice,benefits of juices,annaimadi.com,fresh-juices,natural juice

ஆரஞ்சு ஜூஸ் (Orange juice)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். எனவே, நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, மற்றும் கல்சியம், மக்னீசியம், பஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை சீராகச் செயல்பட வைக்கிறது.

எலும்பு ,நரம்பு  தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு ஏற்றது.

benefits of juices,annaimadi.com,fresh orange juice,natural juice

அன்னாசி ஜூஸ் (Pineapple juice)

அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும். ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும் சிறந்த மருந்து.

கர்ப்பிணிகள் அன்னாசி ஜூஸை தவிர்க்கலாம். கெட்டக் கொழுப்பை குறைக்கும்.

பப்பாளிப்பழ ஜூஸ் (Papaya juice)

தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் சாப்பிட பலன்கள் கிடைக்கும்.பப்பாளிப்பழம் உடல் நலனுக்கு உகந்தது.

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி  கொண்ட பழம் பப்பாளி.பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

கரட் ஜூஸ் (Carrot juice)

வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும். சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம்.

எலுமிச்சை ஜூஸ் (lemon juice)

அதிகமாக அனைவராலும் குடிக்கப்படும்  ஜூஸ் எலுமிச்சை ஜூஸ். இதில் உள்ள விற்றமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும். செரிமானத்தை  அதிகரிக்கவும். இந்த ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது.அசைவ உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice)

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

ரத்தசோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குடித்து வருவது நல்லது.

மாம்பழ ஜூஸ் (Mango juice)

அனைத்து ஜூஸ்களுமே ஏதோ ஒரு வகையில் பல நன்மைகளைத் தருபவைதான். நம் உடலுக்குப் பொருத்தமான ஜூஸைப் பருகுவோம். ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமிடுவோம்!!

Leave a Reply

Your email address will not be published.